Redmi pad 10.61 inch (26.95 cm),2K 1200×2000 பிக்சல் ரேசொலியேசன், 90Hz,10bit, 8000mah,Hileo G99, 18Wஃபாஸ்ட் சார்ஜர், ப்ளூடூத் 5.3, டூயல் பேன்ட் wi-fi, usb-C,
என எண்ணற்ற சிறப்பம்சங்களுடன் களமிறங்கியுள்ள REMI இன் முதல் TAB இதுதான்
XIAOMI என்ற பெயரில் எண்ணற்ற TAB வெளியாகியுள்ளன ஆனால் REDMI என்ற பெயரைச் சூட்டி வந்த முதல் TAB ஆகையால் எண்ணற்ற சிறப்பம்சங்களுடன் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
REDMI PADஇன் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விமர்சனங்களையும் இக்கட்டுரையில் முழுமையாகக் காணலாம்
Redmi pad
Display
10.61 inch (26.95 cm)கொண்ட IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டு,2K (1200×2000) பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில், 90Hz புதுப்பிப்பு தன்மையும்,400nits வரை செல்லக்கூடிய பிரகாசம்,220ppi பிக்சல் அடர்த்தி,10bit டிஸ்ப்ளே,4K வரையிலான ஆதரவை வழங்குகிறது,
1Bilion வண்ணங்களைப் பிரதிபலிக்கிறது, நீல ஒளி காட்சிகள் மிகக்குறைந்த அளவே பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக TUV Rheinland சான்றிதழ் பெற்றுள்ளது, நீண்ட நேரம் TAb பயன்படுத்துபவர்களுக்குக் கண்களில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் இந்த redmi tab வடிவமைக்கப்பட்டுள்ளது,
இது போன்ற எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில், குறைகள் என்று கூறினாள் HDR ஆதரவு வழங்கப்படவில்லை, இதன் பிரகாசம் சூரிய வெளிச்சம் நேரடியாகப் படுகின்ற இடங்களில் பயன்படுத்தும்போது சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது,2K ரேசொலியேசன் இருந்தாலும்,220ppi பிக்சல் அடர்த்தி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
Design
Redmi pad இன் உயரமானது 250.38 mm, அகலம் 157.98mm,தடிமன் பொருத்தவரை மிகவும் மெலிதான 7.05mm கைகளில் பிடித்துப் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக உள்ளது மேலும்
இதன் மொத்த எடை ஆனது 455g என்பது சிறிது அதிகமாகத் தான் உள்ளது ஆனால் அதற்கு முக்கிய காரணம் இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி மற்றும் அலுமினியத்தால் ஆன உடலமைப்பு, ஆம் இதன் உடலமைப்பு முழுவதும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது ஆகையால் தான் இதன் எடை சற்று அதிகமாகவே உள்ளது
மலிவான விலையில் Redmi pad நமக்குக் கிடைக்கின்றன ஆனால் அதைக் கைகளில் பிடித்துப் பயன்படுத்தும்பொழுது, விலை உயர்ந்த சாதனத்தைத் தொடும் உணர்வை அளிக்கிறது,
இடதுபக்கமாக இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகள் அமைப்புகள் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்றுள்ளன, வலது பக்கம் இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகள் மற்றும் USB TYPE-C சார்ஜிங் போர்டு இடம்பெற்றுள்ளன
மேல் பகுதியில் இரண்டு மைக்ரோ போன்கள் மற்றும் நினைவக அட்டை பயன்படுத்துவதற்கான ஸ்லாட் மற்றும் வால்யூம் பட்டன் போன்றவை இடம் பெற்றுள்ளன
Mint Green, Graphite Gray, Moonlight silvers என மூன்று வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன
Procssor
தற்போது புதிதாகக் களமிறங்கியுள்ள மீடியா டெக் HELIO G99 என்ற புதிய ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தப் பிராசஸ் 6 nm இல் உருவாக்கப்பட்டது என்பதினால் மிகக் குறைந்த அளவே பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தி மிகச் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துகிறது,
இந்தப் பிராசசர் ஆக்டா கோர் 2×2.2Ghz,cortex-A76 & 6×2.0Ghz,cortex-A55 வகை CPU பயன்படுத்தி, Mali-G 57 MC2 GPU உடன் இணைந்து செயல்படுகிறது, இந்தப் பிராசஸர் 4G வரை ஆதரிக்கும் தன்மை உடையது,
ஆனால் இந்த Redmi pad இல் சிம் கார்டை பயன்படுத்தும் வசதி கொடுக்கப் படவில்லை என்பதே வருத்தத்தை ஏற்படுத்துகின்றது
Battery
நீண்ட காலம் நீடித்து உழைக்கக்கூடிய மிகப்பெரிய 8000mah மிகப் பெரிய பேட்டரி திறனைக் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது, இந்தப் பேட்டரியை நிரப்புவதற்கு 18W ஆதரிக்கக் கூடியது இந்த REDMI PAD,
இந்தச் சாதனம் ஆதரிப்பது 18W ஆனால் நமக்குக் கொடுத்திருப்பது 22.5W சார்ஜர் ஏன் என்பதை இதுவரை REMI தரப்பில் அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் இந்தச் சாதனத்தில் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மிகப் பெரிய பேட்டரி அமைப்பைக் கொண்டிருப்பது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
Audio
நான்கு ஸ்பீக்கர் அமைப்புகளைக் கொண்டிருந்தாலும், ஸ்டீரியோ ஆடியோவை மட்டுமே வெளிப்படுத்துகிறது, மேலும் இதன் ஆடியோ தரம் மற்றும் சப்தமும், மிகவும் தெளிவாகவும் உரைத்து ஒலிக்கின்றன,
மேலும் ஆடியோவின் தரத்தை மேம்படுத்துவதற்கு Dolby Atmos உடன் இணைந்து ஒலிக்கும்பொழுது மிகவும் துல்லியமான ஆடியோவினை வெளிப்படுத்துகின்றன, ஆடியோவில் குறைகள் என்று கூறினாள் 3.5 mm ஆடியோ ஜாக் கொடுக்கப்படவில்லை என்பது தான் குறையாகத் தெரிகிறது
இருப்பினும் கேமிங் விளையாடும்பொழுது அல்லது மல்டிமீடியா, யூடியூப் இல் வீடியோவைக் காணும்பொழுது உங்களுக்குச் சிறந்த ஆடியோவை வழங்குகிறது
Storage
LPDDR4X RAM வகையும் UFS 2.2 உள் நினைவகம் பயன்படுத்தப்பட்டு 3GB+64GB, 4GB+128GB, 6GB+128GB என மூன்று வகைகளில் கிடைக்கின்றன,
நினைவக அட்டையைப் பயன்படுத்தி 1TB வரையிலான கூடுதல் நினைவகத்தை அதிகரித்துக்கொள்ள இயலும்
Camera
Rear camera
8mp f/2.0 உடன் கூடிய கேமராவை பின்பகுதியில் அமையப்பெற்றுள்ளது, இந்தக் கேமராவை பயன்படுத்தி சிறப்பான புகைப்படங்கள் பதிவிடலாம் ஆனால், மிகச் சிறப்பாக இருக்கும் என்றால் நிச்சயம் இல்லை என்று கூறலாம், புகைப்படம் எடுப்பதில் மற்றும் வீடியோ பணி பதிவிடுவது ஸ்மார்ட்போன்களில் கொடுக்கக்கூடிய பல சிறப்பம்சங்கள் இங்குக் குறைவாகவே இருக்கின்றன,
வீடியோவைப் பதிவிடும்பொழுது 1080p இல் @30fps வரையிலான வீடியோவைப் பதிவிடுகின்றன, 4k போன்ற வீடியோக்களைப் பதிவிடும் என உங்கள் எதிர்பார்ப்பு இங்கு நிச்சயம் இல்லை
Frond camera
முன்பக்கமாக 8mp f/2.2லென்சை கொண்ட கேமரா அமைப்பைப் பெற்றுள்ளது, இந்தக் கேமராவில் 105 டிகிரி வரையிலான பரந்து விரிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பதி விடக்கூடியது
மேலும் இந்தக் கேமராவில் போக்கஸ் mode அமைப்பு கொண்டிருப்பதனால் வீடியோ அழைப்புகள் போன்றவற்றை மேற்கொள்ளும்பொழுது நீங்கள் நகர்ந்து செல்லும்போது கூட உங்களை மையப்படுத்தி காட்டுகிறது
வீடியோ என்று வருகையில் 1080p இல் @30fps வரையிலான வீடியோவினை பதிவிட இயலும்
Oprating system
செயல்பாட்டு முறையில் ஆண்ட்ராய்டு 12 கொண்டு MIUI pad UI இணைந்து செயல்படுகிறது, MIUI pad UI இன் செயல்பாட்டு முறையில் ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளைச் செயல்படுத்துவது split screen, floating window, multi window எனப் பலவகையான செயலைச் செய்வதற்கு
அமைப்பு (Setting) அமைப்பிற்கு சென்று உங்கள் தேவைக்கேற்ப செயலிகளைத் தேர்வு செய்து வைப்பதன் மூலமாக மல்டி விண்டோ போன்ற செயல்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள இயலும்
ஆண்ட்ராய்ட் அப்பிளுக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் REDMI தரப்பில் இரண்டு வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படுமென உறுதியளித்துள்ளது
Connectivity
சிம் கார்டு பயன்படுத்து வதற்கான வசதி கொடுக்கப்படவில்லை என்றாலும், இணையதளங்களை பயன்படுத்துவதற்கு wi-fi மூலமாக மட்டுமே இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளும் இந்த wi-fi அமைப்பில் dual band wi-fi மூலமாக ஒரே நேரத்தில் இரண்டு வகையான wi-fi இணைப்புகளை இணைத்துக் கொள்ள இயலும் அதுமட்டுமின்றி
எந்த wi-fi நெட்வொர்க் அதிவேகமாகச் செயல்படுகிறதோ அதற்கு ஏற்றார்போல் தானாகவே மாற்றி அமைத்துக் கொண்டு இணையதளங்களை அதிவேகமாகச் செயல்படுத்துகிறது
more
Advantage
தேவைக்கேற்ப சென்சார்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு சென்சார்கள் என்று சொல்லக்கூடிய இந்தச் சென்சார்கள் கொடுக்கப்படவில்லை, USB 2.2,4 ஸ்பீக்கர் அமைப்புகள், usb tyep-C, 2K டிஸ்ப்ளே, 18W சார்ஜர், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், சிறந்த, நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி அமைப்பு, மிகவும் மெலிதான 7.05mm தடிமன்,
Disadvantage
அனைத்து வகைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன REDMI நிறுவனம் ஒரு சில குறைகளை இருக்கத்தான் செய்கிறது, சிம்கார்டு அமைப்பு கொடுக்கப்படவில்லை, ஜிபிஎஸ் கொடுக்கப்படவில்லை 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்படவில்லை, கேமரா அமைப்புகளில் இன்னும் சற்று கவனத்தை செலுத்த வேண்டும்
Price
தற்போது உள்ள விலை நிலவரங்களைப் பற்றி மட்டுமே பதிவிட்டுள்ளேன், வரும் காலங்களில் விலைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்
mi.com
6GB+128GB 19,899
4GB+128GB 17,899
3GB+64GB 14,899