Oneplus 10R v/s Realme GT neo3 Compare specs & Price

Oneplus 10R v/s Realme GT neo3 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களையும் ஒப்பிட்டுக் காண்போம்  6.7 inch டிஸ்பிலே, full hd+, AMOLED,HDR10+, 120Hz,4500mah பேட்டரி, 80W SUPER VOOCசார்ஜர், மீடியா டெக் டைமன் சைட் 8100MAX பிராசஸர், 50MP+8MP+2MP, ரியர் கேமரா,16MPசெல்பி கேமரா, இந்த இரண்டு போன்களிலும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றிய நன்மை தீமைகள் என அனைத்தையும் முழு விமர்சனமாக காணலாம்.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? என்பதை பற்றி குறிப்பிடுங்கள்

Oneplus 10R

Display

இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை One plus  ஸ்மார்ட்போன்களில் ஒன்றான One plus 10R  இந்த ஸ்மார்ட்போன் காண்போரை கவர்ந்து ஈர்க்க கூடிய வடிவமைப்பை பெற்றுள்ளது,6.7inch என்ற அளவினை கொண்ட  டிஸ்ப்ளேவை பெற்று 2412×1080 பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது (394 ppi) ஒரு இன்ச் என்ற அளவிற்கு 394  பிக்சல் அடர்த்தி கொண்டதுm இந்த டிஸ்ப்ளேவில் தோற்ற விகிதமானது 20;9 என்ற விருதினைப் பெற்றுள்ளது.

FLUID OLED கொண்டுள்ளதால் காட்சிகளை காண்பதற்கு நேர்த்தியான வண்ணங்களையும் காட்சிகளையும் பிரதிப்பதிலும் அளிப்பதிலும் சிறந்ததாக திகழ்கிறது இதற்கு காரணம் FLUID OLED டிஸ்ப்ளே ஆகும்,AMOLED டிஸ்ப்ளே என்பதனால்  ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் கொண்டுள்ளது

இந்த டிஸ்ப்ளேவை ஆதரிப்பதற்கு sRGB, P3,10bit மற்றும் HDR 10+  ஆதரவை  பெற்றிருப்பதுதான் காரணம் அதுமட்டுமின்றி HDR 10+ ஆதரவை கொண்டிருப்பதனால்

OTT இணையதளங்களில் அதாவது Netflix, Amazon Prime, YouTube போன்றவற்றில் HDR ஆதரவை அளிப்பதனால் திரையில் காணும் காட்சிகளை மேலும் சிறப்பாக்கிகிறது 

180HZஎன்ற விகிதத்தில் தொடுதல் மாதிரி விகிதத்தினை பெற்றுள்ளது,60 HZ/90HZ/120HZ என்ற விகிதத்தில் புதுப்பிப்பு தன்மையை கொண்டுள்ளது, தானியங்கியாக செயல்படும் பொழுது 60/90/120HZஎன தானாகவே மாற்றி அமைத்துக் கொள்கிறது. இருப்பினும் 120HZ இல் நிலையான புதுப்பிப்பு தன்மை வேண்டும் என்றால்  அதற்கும் ஆதரவு வழங்கப்படுகிறது

இருப்பினும் பேட்டரியின் சக்தியை சேமிக்க வேண்டும் என்றால் தானியங்கியல்( automatec)இல் பயன்படுத்துவது சிறந்தது என்பதே என்னுடைய கருத்து.120Hz தொடுதல் மாதிரி விகிதத்தினை பெற்றுள்ளது,

மேலும் இந்த டிஸ்ப்ளேவில் Hyper touch, Reding mode, night mode, Eye comfort, Auto brightness,Manual brightness,Optical in-display fingerprint sensor,1000nits brightness, Corning Gorilla Glass 5  display productionபோன்ற மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன

 

10Rஆனது பின்பகுதியில் கண்ணாடி உடல் அமைப்பினை கொண்டதாகும், முதன்மை கேமராவை பெரிதாகக் வடிவமைத்து

மீதமுள்ள இரண்டு கேமராக்களை சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது,கேமரா அமைப்பு பகுதியிலிருந்து அதற்குக் கீழ் சிறு சிறு  கோடுகள்  இதை  Water Fall Designing என்று One Plus  தரப்பில் அழைக்கப்படுகிறது

 Designing

இந்த10R ஸ்மார்ட்போனின் கீழ்பகுதியில் சிம் ஸ்லாட், மைக்ரோபோன், முதன்மை ஸ்பீக்கர்,usb type-C சார்ஜிங் போர்டு இடம்பெற்றுள்ளது. பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது,

இடது பக்கமாக வால்யூம் பட்டன்  கொண்டுள்ளது மேல் பகுதியில் இரண்டாம்நிலை மைக்ரோபோன் (Noise cancellation mic ) இடம்பெற்றுள்ளது,ear speaker வழியாக stereo ஒலியினை வெளிப்படுத்துகின்றன 

163.3mm,நீலமும் 75.5mm, அகலத்தையும் 8.2mm, தடிமனையும் 186g என்ற எடையையும் பெற்றுள்ளது.

Sim card

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்கார்டுகள் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில் ஒரே நேரத்தில் 5G, மற்றும் 4G ஆதரவை வழங்கக்கூடிய தன்மை கொண்டதாகும்,  ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்களை மட்டுமே பயன்படுத்த இயலும், நினைவக அட்டையை பயன்படுத்த இயலாது

Oneplus 10R v/s Realme GT neo3 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களி 10R ஸ்மார்ட் போனுடன் ஆண்ட்ராய்டு12 உடன் கிடைக்கப்பெறுகின்றன இதனை ஆதரிக்கும் வகையில் ஆக்சிஜன் OS12  உடன் செயல்படுகிறது, ஆக்சிஜன் OS என்று கூறுவதை காட்டிலும் COIOR OS என்றே  கூறலாம், ஏன் இப்படி கூறினேன் தெரியுமா? தெரிந்தால் (Comment)இல் பதிவிடவும் 

மூன்று வருடங்களுக்கு ஆண்ட்ராய்ட்  அப்டேட் வழங்கப்படும், மற்றும் நான்கு வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் களும் வழங்கப்படும் என one plus  தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது 

Battery

இரண்டு வகையான பேட்டரி அமைப்புகளையும், இரண்டுவகையான  சார்ஜர்களும் வழங்கப்படுகின்றன ,4500Mah பேட்டரியை கொண்டு ஸ்மார்ட்போன்களுக்கு 150W SUPER VOOC சார்ஜர் வழங்கப்படுகிறது,5000Mah பேட்டரியை பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன் இருக்கு 80W  SUPER VOOC சார்ஜர் வழங்கப்படுகிறது

சார்ஜர் தான் இரண்டு வகை கொடுக்கப்பட்டுள்ளது என்றாள் ஒவ்வொரு ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரியும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது அதாவது 5000Mah என்றால் (2500+2500)எனவும் 4500Mah (2250+2250)  என ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு பேட்டரிகள் அமைப்பை பெற்றுள்ளது,இதற்கு காரணம் ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்பை கொண்டிருப்பதனால்  அதிகப்படியான  வெப்பமாவதை தடுப்பதற்கு இதுபோன்ற வடிவமைப்புகளை பெற்றிருக்கிறது.இந்த ஸ்மார்ட்போன் உடன் வழங்க கூடிய சார்ஜர் type-C to type-C சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது .

processor

மீடியா டெக் டைமன் சைட் 800 MAX பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது,இந்த பிராசஸர் ஆனது 5nm இல் உருவாக்கப்பட்டது ஆகையால் மிகவும் சக்தி வாய்ந்த பிராசஸர் ஆக திகழ்கிறது

 இந்த டைமன் சைட் 800MAX  பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டா-கோர் (4×2.85GHZ cortex-A78 & 4×2.0GHZ cortex-A55) CPUவையும் Mali-G610 mc6 GPU வழங்கப்படுகிறது.இந்தப் பிராசஸர் ஆனது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதினால் அதிகப்படியான வெப்பத்தினை வெளிப்படுத்தக் கூடும்  

எனவே  vapour chamber cooling Technology தொழில்நுட்பத்தினை பயன்படுத்தப்பட்டுள்ளது ஆகையால் அதிகப்படியான வெப்பத்தினை கட்டுப்படுத்துகிறது.

கேமிங் பிரியர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு வரப்பிரசாதம்  என்றே கூறலாம் ஏனென்றால் Hyper boost Technology பயன்படுத்தி கேமின் விளையாடும் பொழுது  சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது 

Storege

LPDDR5 வகை சார்ந்த RAM ல் 8GB மற்றும் 12GB  இரண்டு வகையான RAM  கலில் கிடைக்கின்றன UFS 3.1வகை சார்ந்த உள்ளடக்க நினைவகத்துடன்

128GB,256GB  என்ற இரண்டு வகைகளில் கிடைக்கப்பெறுகின்றன.நினைவக அட்டையை பயன்படுத்த இயலாது  என்பது குறிப்பிடத்தக்கது 

Rear camera

Oneplus 10Rஇன் மூன்று வகையான கேமராக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது அதில் முதன்மை கேமராவாக sony IMX766  என்ற கேமராவினை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை ஆனது 50mp,f/1.8 லென்ஸை கொண்ட PDFA  கேமரா வாங்கும் இந்த  கேமராவில் OIS  ஆதரவை பெற்றுள்ளது, இரண்டாவது கேமராவாக 8mp,f/2.2 ரசனை கொண்ட அல்ட்ரா லைட் கேமரா வாங்கும் இந்த கேமராவை பயன்படுத்தி 119.7 டிகிரி வரையிலான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட இயலும். மூன்றாவது கேமராவாக2mp,f/2.4 லென்ஸ் இணை கொண்ட  மேக்ரோ கேமரா வாகும் இந்த கேமராவை பயன்படுத்தி 4cm  வரையிலான மிக அருகாமையில் சென்று புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது 

இந்த மூன்று கேமராக்களையும் பயன்படுத்தி Multi auto focus, focus ( Aall. pixel Omni, PDAF+, lLAF+CAF ),Nightcap 2.0, super macro, ultrashort, HDR, glamour scanning recognition,

portrait, Pro mode, Panorama, tilt shutter mode,  filters, time lamp hyper lamp, video portrait போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது

Frond camera

16mp,f/2.4லென்ஸை கொண்ட கேமரா வினை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி 1080pவீடியோக்களை 30fps வரை பதி விடுகிறது மேலும் செல்பி ,எஸ்டிஆர்,பேஸ்  அன்லாக் செயல்படுவதற்கும் இந்த கேமராவை பயன்படுத்தப்படுகிறது

More future

ப்ளூடூத் 5.3 வழங்கப்படுகிறது இந்த ப்ளூடூத் வழியாக  SBC& Ldak& AAC& போன்ற வகையான ஆடியோக்களை ப்ளூடூத் வழியாக வெளிப்படுகின்றன Dual band Wi-Fi, NFC,Dual 4G, dual 5G, GPS, a GPS ,Optical in display fingerprint sensor, A accelerometer,Electronic compass, gyroscope, ambient lights, proximity sensor, sensor core,Flick-Dedicated sensor 

ஆடியோ வகைகளில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,  நைஸ் கேன்சல் சப்போர்ட்,டைரக்ட் ஆடியோ, போன்றவற்றை மட்டுமே வழங்குகிறது மேலும் டால்பி, டால்பி ஆடியோஸ் டால்பி அட்மாஸ் போன்ற வசதிகள் பெறப்படவில்லை 

Realme GT Neo 3

Display

6,7இன்ஸ் கொண்ட full HD+ Super AMOLED டிஸ்ப்ளேவை பெற்று 2412×1080 பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது 120HZ புதுப்பிக்கும் தன்மையை பெற்றுள்ளது,(394ppi)  ஒரு இன்ச் அளவிற்கு394 பிக்சல் கொண்டதாகும், தோற்ற விகிதமானது 20;9 என்ற விருதினைப் பெற்றுள்ளது.

HDR10+ ஆதரவை வழங்குகிறது,AMOLED டிஸ்ப்ளே என்பதனால் ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர்,

HDR10+ வீடியோக்களை யூடியூப், நெட்பிளிக்ஸ், அமேசன் பிரைம் போன்ற வலைதளங்களில்  காணும்பொழுது HDR ஆதரவை வழங்குகிறது

Oneplus 10R v/s Realme GT neo3 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களி Realme GT Neo3 ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே விற்கு என்றேன் தனிப்பட்ட பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது ஆகையால் பேட்டரியின் சக்தியை மிகக் குறைந்த அளவே பயன் படுத்துகிறது

மேலும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மிக வேகமாக புதுப்பிப்பது வீடியோ காட்சிகளை தெளிவாக வழங்குவதிலும் சிறந்து விளங்குகிறது

டிஸ்ப்ளே வின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது,163.3mm என்ற விகிதத்தில் உயரமும்75.6mm அகலமும்,8.2mm என்ற விகிதத்தில் தடிமனையும் பெற்றுள்ளது, இதன் மொத்த எடை 188g எடையினை பெற்றுள்ளது

 Designing

வடிவமைப்பு என்று வருகையில் “RACING STRIPE” என்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது இதைக் காணும் பொழுது கார் பந்தயங்களில் பயன்படுத்தக்கூடிய வெள்ளை கோடுகளை போன்று அமைப்பை பெற்றுள்ளது

 இந்த கோடுகள் ஆனது கேமராவின் கீழ் பகுதியிலிருந்து நேர் கீழ்பகுதி வரை  இரண்டு வெள்ளைக் கோடுகள் இடம்பெற்றுள்ளன,

இதை காணும்போது ஒரு புதுவிதமான வடிவமைப்பைப் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் கண்ணாடி உடலமைப்பை பெற்றுள்ளது

 

GT Neo 3 ஸ்மார்ட்போனின் கீழ்ப்பகுதியில் முதன்மை மைக்ரோபோன்,type-C சார்ஜிங் போர்டு, முதன்மை ஸ்பீக்கர் மற்றும் சிம் ஸ்லாட் போன்றவற்றை  அமைப்புகளை  பெற்றுள்ளது, இந்த சிம் கார்டில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதியை கொண்டுள்ளது இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 5g மற்றும் 4G ஆதரவை ஒரே நேரத்தில் வழங்குகிறது 

வலது பக்கமாக வால்யூம் பட்டன் இடம்பெற்றுள்ளது, மேல் பகுதியில் இரண்டாம் நிலை மைக்ரோபோன்,ஸ்டீரியோ அமைப்பிற்கான இரண்டாம்நிலை ஸ்பீக்கர் போன்றவற்றை

மேல் பகுதியில் கொண்டுள்ளது,இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகள் பெற்று இருப்பதனால் ஸ்டீரியோ ஆடியோவை வழங்குகிறது

ஆண்ட்ராய்டு 12 உடன் இயங்குகிறது இதனை ஆதரிக்கும் வகையில் ரியல் மீ UI 3.0 வழங்கப்படுகிறது

ஆண்ட்ராய்டு அப்டேட்களை பற்றி எந்த ஒரு தகவல்களையும் ரியல்மி தரப்பில் வழங்கப்படவில்லை

Battery

5000Mah பேட்டரி திறனைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு 80W சார்ஜர் வழங்கப்படுகிறது,4500Mah பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு 150W சார்ஜர் வழங்கப்படுகிறது

ஒரு ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது அதாவது4500Mah எனில்(2250+2250)  எனவும் 5000Mahபேட்டரியை (2500+2500)  என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது

ஏனெனில் ஃபாஸ்ட் சார்ஜர் டெக்னாலஜியை பயன்படுத்துவதனால் பேட்டரி களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக இதுபோன்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தப்பட்டுள்ளது

80Wசார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும் பொழுது 12 நிமிடங்களில் 50 சதவீத பேட்டரியை நிறுத்தி விடுகிறது,150W  சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும் பொழுது வெறும் 5 நிமிடங்களில் 50 சதவீத பேட்டரி நிரப்பி விடுகிறது அதிவேகமாக சார்ஜ்  செய்வதனால்  இந்த ஸ்மார்ட்போன்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதற்காக  TUV Rheinland safe fast charging சான்றிதழ் பெறப்பட்டுள்ளது,இதன் மூலமாக ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் செய்யும் பொழுது எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது என தெரிகிறது 

Processor

மீடியாடெக் டைமன் சைட் 8100MAX ப்ரௌஸ்சர் வழங்கப்பட்டுள்ளது.இந்த ப்ராசசர் ஆனது 5nm இல் உருவாக்கப்பட்டது ஆகையால் மிகவும் சக்தி வாய்ந்ததா பிராசஸர் ஆக திகழ்கிறது இந்த டைமண்ட் சைட் 8100 max  பிராஸ்ஸேர் ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் (4×2.85GHZ cortex-A78 &4X2.0GHZ cortex-A55) CPUவழங்கப்பட்டுள்ளது ,Mali-G610 mc6 வகை சார்ந்த GPU வழங்கப்பட்டுள்ளது 

8GB+12GB என இரண்டு வகையான RAM களில் LPDDR5 உடன் வருகிறது  128GB++256GB என்று இரண்டு வகையான உள்ளடக்கம்  நினைவகத்துடன் UFS 3.1 உடன் வருகிறது 

Rear camera

மூன்று வகையான கேமராக்களை கொண்டுள்ள இந்த 10R இல் முதன்மை கேமராவாக சோனி IMX 766 என்ற கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமரா 50mp,f/1.8 லென்சை கொண்ட PDAF  கேமரா வாங்கும் இந்த கேமராவில் OIS ஆதரவு வழங்கப் படுகிறது

 இரண்டாவது 8MP,f/2.2 லென்ஸ் கொண்ட அல்ட்ரா லைட் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவில் மூலமாக 119.7 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட இயலும்

மூன்றாவது கேமரா வாங்க 2mp,f/2.4 லென்சை கொண்ட  மேக்ரோ கேமராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது,

இந்த கேமராவை பயன்படுத்தி 4 சென்டிமீட்டர் வரையிலான மிக அருகாமையில் சென்று புகைப்படங்களை பதிவிட இயலும்

 இத்துடன் LED பிளாஸ் லைட்டையும் கொண்டுள்ளது, இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி Multi auto focus,(all pixel Omni Direction, PDAF+LA F+CAF)

 Nightcap 2.0,super macro,Ultrashort,HDR, intelligent scanning recognition,portrait mode,  Pro mode, tilt- Swift mode,focus peaking,Filter,video,

HDR,video portrait,time-lapse,hyper-lapse என பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட இயலும்

Frond camera

 முன்பக்க கேமராவிற்கு 16mp, f/2.4 லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி1080p வீடியோக்களை 30fps  வரையிலும்.

புகைப்படங்களில் செல்பி மற்றும் பேஷன் லாக் செய்வதற்கு இந்த கேமராவை பயன்படுத்தப்படுகிறது

 

Mora future

ப்ளூடூத் 5.3 வழங்கப்படுகிறது எந்த ப்ளூடூத் வழியாக SBC&AAC,APTX,APTX-HD,LHDC,X HD&LDAC&AACஆதரவை அளிக்கிறது.  டூயல் பேண்ட் வைபை 6, என் எஃப் சி, டூயல்4ஜி,  டூயல் 5G, ஜிபிஎஸ் ,ஏஜிபிஎஸ்.9வகையான இடங்களில் 5G,4G.WI-FI,Bluetooth,NFC  ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளது ஆகையால் நெட்வொர்க் இணைப்புகள் எந்த விதத்திலும் தடை ஏற்படாத வண்ணங்களில் பல இடங்களில் ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளன

கேமிங் விளையாடும் பொழுது எந்த விதமான தடையின்றி விளையாட உறுதுணையாக இருக்கிறது மேலும் கேமிங் விளையாடுவதற்கு GT GAMING MODE தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளது,

இந்த அமைப்பின் மூலமாக எண்ணற்ற கேம் பிரியர்களுக்கு என்று பலவிதமான சிறப்பம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன 

 ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் HI-RES ஆடியோ, டால்பி அட்மாஸ் ஆடியோ ஆகிய இரண்டிற்கும் சான்றிதழ் பெற்றிருக்கின்றன 

 இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர், லைட் சென்சார் பிராக்சிமிடி சென்சர், சென்சார் கோர், டெடிகேட்டட் சென்சார்

இந்தonplus 10r or realme gt neo 3 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்?

இரண்டுமே ஒன்றைப் போல் ஒன்று என்று அனைத்து சிறப்பம்சங்கள் ஒரே மாதிரியானவை ஆகவே இருப்பினும் வெளிப்புறத்தில் மட்டும் அதன் தோற்றத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

அதை தவிர எந்த ஒரு மாற்றமும் இல்லை இருப்பினும் ONEPLUS 10R இல் மட்டும் 2000 ரூபாய்  அதிகமான விலையில் இருப்பது ஏன்? 

0NEPLUS 10R

128GB+256GB-150W-43,999

8GB+128GB    -80W-38,999

12GB+256GB-80W-42,999

REALME GT NEO 3

12GB+256GB-150W-42,999

8GB+128GB -80W-36,999

12GB+256GB-80W-38,999

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *