Realme GT2 Review Paper Inspired designig Pros and Cons

 

 

 

Realme GT2 ஸ்மார்ட்போன்வடிவமைப்பு மற்ற ஸ்மார்ட் போன்களை காட்டிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காகப், புதுப்புது வடிவமைப் பையும் தங்களது தனித்துவத்தை காட்டுவதற்கும் புதுவகையான வடிவமைப்புகளை வடிவமைப்பது வழக்கமாகத் தான் உள்ளதுஅதேபோல் ஸ்மார்ட்போன் தயாரிக்கக்கூடிய நிறுவனமான ரியல் மீ தங்களது GT2 வரிசையில்  வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒவ்வொன்றும் புது விதமான வடிவமைப்பைப் பெற்றிருந்தது வெங்காயம், பூண்டு எனப் புதுவிதமான வடிவமைப்புகளை ரியல் மீ GT  ஸ்மார்ட்போன்களில் வரிசையில் கண்டிருப்போம், தற்போது வெளியிட்டுள்ளரியல் மீ   GT2ஸ்மார்ட் போனை பற்றிய முழு தகவல்களையும் விமர்சனங்களையும் காணலாம்

Realme GT2

Display

ரியல் மீ GT 2 ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தின் சிறந்த டிஸ்ப்ளே களில் ஒன்றான E4 AMOLED இவை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த டிஸ்ப்ளே ஆனது 6.62 இன்ச் கொண்ட FULL HD+ AMOLED டிஸ்ப்ளே ஆகும்

2400×1080 பிக்சல் ரேசொலியேசன் கொண்டது,398  என்ற விகிதத்தில் பிக்சல் அடர்த்திஇணை  கொண்டது (PPI) pixel per inch.

1300 nits வரை செல்லக்கூடிய பிரைட் ரைஸ் கொண்டிருப்பதனால் நேரடி சூரிய வெளிச்சத்தில்  பயன்படுத்துவதற்கு மிகவும் சிறந்த காட்சிகளை வழங்குகிறது

120Hz வரையிலான புதுப்பிப்பு விகிதத்தைப் பெற்றுள்ளது, தானியங்கி(auto mode) பயன்படுத்தும்பொழுது1Hz முதல் 60hz,90hz,120HZ வரையிலான புதுப்பிப்பு ததன்மையைத் தானாகவேமாற்றி அமைத்துக் கொள்கிறது,

உங்களுக்கு 120Hz மற்றும் நிலையான செயல்பாட்டினை வேண்டும் எனில், அதற்கும் இந்த ஸ்மார்ட்போனில் அனுமதி அளிக்கிறது.

தானாகவே மாற்றி அமைத்துக் கொள்ளும்பொழுது பேட்டரியின் சக்தியை மிகக் குறைந்த அளவே செலவிடுகிறது.

HDR,HDR10+.HLG போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளேவில் YOUTUB இல் HDR வீடியோக்களை அனுமதிக்கிறது. ஆனால் NETFLIX போன்ற OTT  தளங்களில் HDR  ஆதரவு அளிக்கவில்லை என்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் யூடியுப் வீடியோக்களில் மட்டும்HDR  ஆதரவை அளிக்கிறது, மேலும் யூட்யூபில் 4K ரெசல்யூசன் கொண்ட வீடியோக்களை ஆதரிக்கிறது.

 GT2 ஸ்மார்ட்போனில் 1000Hz தொடுதல் மாதிரி விகிதம் (touch sampling rate)கொண்டுள்ளது இதுவரை எந்த ஸ்மார்ட் போன்களிலும் தொடுதல் மாதிரி விகிதம் இந்த அளவிற்கு கொடுக்கப்படவில்லை இதுவே முதல் முறையாகும் 

Network

4G,5G,மற்றும் Wi-Fi  அலைவரிசைகளில் Antennas 11வகையான இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது ஆகையால் 4G,5G மற்றும் Wi-fi  அலைவரிசைகள் தங்குதடையின்றி உங்களுக்கு வழங்குகின்றன

 

 Designing

திரையின் மேல் பகுதியில் இடது பக்கமாக ஒன்றை பயன்படுத்தி அதில்  முன்பக்க கேமரா    (Punch hole-display) வைபெற்றுள்ளது, இந்த டிஸ்ப்ளேவில் OPTICAL in-display கொண்டுள்ளது,

இத்துடன் இதயத்துடிப்பை கண்காணிக்கக்கூடிய கருவியும் இந்த  ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட்  சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது (குறிப்பு)  இந்த  ஸ்மார்ட்  போனில் இதயத்துடிப்பை கணக்கிடுவது மருத்துவத்துறைக்கு பயன்படுத்துவது உகந்தது அல்ல

 வலது பக்கமாகப் பவர் பட்டனை மட்டுமே இடம்பெற்றுள்ளது, இடது பக்கமாக வால்யூம் பட்டனை மட்டுமே கொண்டுள்ளது,

கீழ்பகுதியில் சிம் ஸ்லாட், முதன்மை மைக்ரோபோன், USB TYPE-C  சார்ஜிங் போர்டு, முதன்மை போன்றவற்றை இந்த ஸ்மார்ட்போனின் கீழ்பகுதியில் கொண்டுள்ளது

Sim card

ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகளை   பயன்படுத்த இயலும் ஆனால் நினைவக அட்டையைப் பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது இந்த இரண்டு சிம்கார்டுளிலும் ஒரே நேரத்தில் 5G+5G DUAL MODE,SA/NSA ஆதரவை வழங்கக்கூடியது 

sound

GT2 ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது, முதன்மை ஸ்பீக்கர் கீழ் பகுதியிலும்

இரண்டாம்நிலை ஸ்பீக்கர்  மேல் பகுதியில் உள்ள (Earphone)இல் கொடுக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் வழியாக ஸ்டீரியோ ஒளியிலே வெளியிடுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே கொண்டுள்ளது.

இதன் உயரம் 162.9 mm, அகலம்75.8 mm, தடிமன்8.6 mm என்ற அளவினை கொண்டுள்ளது  ஸ்மார்ட்போன் மொத்த எடை 194.5g என்ற எடையினை பெற்றுள்ளது.

Operating system

ஆண்ட்ராய்டு12 மற்றும் ரியல் மீ UI3.0 கொண்டு செயல்படுகிறது இந்த GT2 ஸ்மார்ட்போன் இருக்கு மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும்நான்கு வருடங்களுக்கும் செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படுமென ரியல்மீ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது 

Battery

5000Mahபேட்டரி திறனைப் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் இருக்கு 65W SUPER DART CHARGE தொழில்நுட்பத்தை கொண்ட இந்தச் சார்ஜரை பயன்படுத்தப்பட்டுள்ளது,

இந்த65W ஃபாஸ்ட் சார்ஜர் ஐ பயன்படுத்தி 100 சதவீத பேட்டரி எழுப்புவதற்கு வெறும் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது

 இரண்டு பேட்டரி அமைப்புகளைப் பெற்றுள்ளது,  இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு பேட்டரி அமைப்புகளா என்று ஆச்சரியப்பட வேண்டாம்

5000Mah  பேட்டரியை இரண்டாகப் பிரித்து(2500+2500) இரண்டு பேட்டரி களாக அமைக்கப்பட்டுள்ளது,

ஏனெனில் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் அதிகப்படியான வெப்பம் ஏற்படாமல் இருப்பதற்கும் பேட்டரியின் நலனைக் கருதியும் இந்த 5000Mah பேட்டரி இரண்டாகப் பிரித்துப் பயன்படுத்தப்படுகிறது

 Rear camera

பின்பகுதியில் முதன்மை கேமராவாக Sony IMX  766 கேமரா 50mp,f/1.8 லென்ஸ் கொண்ட கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தக் கேமராவில் OIS ஆதரவை  பெற்றுள்ளது,84.4 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விடுகிறது, OIS கொண்டிருப்பதனால் வீடியோக்களைப் பதிவிடும்பொழுது நடுக்கம் மற்ற வீடியோக்களைப் பதிவு இடுகின்றன

 

 அல்ட்ரா வைட் கேமராவிற்கு 8mp,f/2.2  கொண்லென்ஸ்டுள்ள இந்தக் கேமராவில் மூலமாக 119 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட இயலும்

 மேக்ரோ கேமராவிற்கு 2mp,f/2.4 லென்ஸ் கொண்டுள்ளது, இந்தக் கேமராவின் மூலமாக 4 சென்டிமீட்டர் வரையிலான புகைப்படங்களை மிக அருகாமையில் சென்று பதிவிட இயலும்

 

 இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி 50mp camera mode, Street photography, nightscape, expert, Bokeh, HDR, ultrawide, AI  beauty, text scanner, photography, Night mode, Panorama, Wide Angle,

போன்ற மேலும் சிறப்பம்சங்களைக் கொண்டு புகைப்படங்களைப் பதிவிடும்பொழுது மிகச் சிறப்பான புகைப்படங்களை வெளியிடுவதுடன்

இரவு நேரப் புகைப்படங்களில் மிகத் துல்லியமான புகைப்படங்களை வெளிப்படுத்துகின்றன வீடியோ என்று வருகையில் AI Nightscape video mode, portrait mode, Bokeh flare portrait mode, video stabilization, auto enable focus, video filter, slow -motion, movie mod video stabilization auto enable

புகைப்படங்களை மட்டும் சிறப்பான புகைப்படங்களை வெளியிடுவதுடன் மிகச் சிறந்த  வீடியோக்களை பதிவிடுகிறது” AI”செயற்கை நுண்ணறிவு மூலமாக நாம் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் துல்லியமாகவும் சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்குகிறது

Frond camera

முன்பக்க கேமராவிற்கு Sony IMX471 சென்சார் கொண்ட 16mp,f/2.5 லென்சை கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவை பயன்படுத்தி Portrait bokeh, time-lapse, beauty mode, HDR, face recognition, filter, super  nightscape, Boke, portrait, AI Beauty selfie, Chroma boost, sticker போன்ற வகையான புகைப்படங்களை முன்பக்க  கேமராவை பயன்படுத்தி புகைப்படங்களைப் பதிவிடலாம்,

வீடியோ என்று வருகையில் இந்தக் கேமரா மூலமாக  dual -view video, video stabilization, super portrait mod, night selfie photography, black and white  videos,1080p, இல்30fps வரையிலும்,720இல்30fps வரையிலான வீடியோக்களை முன்பக்க கேமராவை பயன்படுத்தி பதிவிட இயலும்

Processor

தற்போது உள்ள மிகச் சக்திவாய்ந்த  பிராசஸர்கலில் ஒன்றான  குவால்காம் நிறுவனத்தின்  ஸ்நாப்ட்ரேகன் 888 ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பிராசஸர் 5nm இல் உருவாக்கப்பட்டது, இந்தப் பிராசஸர் 5G ஆதரவை அளிக்கக்கூடிய பிராசஸர் திகழ்கிறது, இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் ஆக்டாகோர் 2.84GHz single core,kryo680+2.42GHz,tri core, kryo 680+1.8GHz,Quad core, kryo 680,64bit architecture,5 nm Fabrication,

 Adreno 660 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது LPDDR5 வகையைச் சார்ந்த RAM நினைவகத்தை பயன்படுத்தப்பட்டுள்ளது உள்ளடக்க நினைவகம் என்று வருகையில் UFS 3.1 நினைவகத்தை பயன்படுத்தப்படுகிறது,

Storeg

இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கக்கூடிய 8 GB RAM அல்லது 12 GB RAM என இரண்டு வகையான RAM கிடைக்கின்றன மேலும்,

RAM  அதிகரித்துக் கொள்ள கூடிய RAM BOOST  பயன்படுத்தி 7 GB வரையிலான RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் 

Cooling technology

கூலிங் டெக்னாலஜி என்று வருகையில் இந்த GT2  ஸ்மார்ட்போனில்  துருப்பிடிக்காத ஸ்டீல் அமைப்பைக் கொண்டு உள்ளது இந்த ஸ்டில் ஆனது எட்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் சிஸ்டம் +  கொண்டு வெப்பத்தை தணிக்க பயன்படுத்தப்படுகிறது இதன் மூலமாக 50% முதல் 60% வரை வெப்பத்தை தணிக்கும் தன்மை பெற்றுள்ளது 

888பிராசஸர் சற்று வெப்பத்தினை அதிகமாகவே வெளிப்படுத்தக்கூடிய  ப்ராசசர் ஆகும் ஆகையால் இந்தப் பிராஸ்ஸேர்  பயன்படுத்தும்போது நிச்சயமாகக் கூலிங் டெக்னாலஜி பயன்படுத்த வேண்டியுள்ளது,

ஏனென்றால் இந்தப் பிராசசர் அவனது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய தாகவும் இருப்பதினால், மிகக்கடுமையான வீடியோ கேம்ஸ் மற்றும் உயர்தரமான வீடியோக்களை மற்றும் புகைப்படங்களைப் பதிவிடும் போதும் இந்த ஸ்மார்ட்போனில் சற்று வெப்பத்தினை வெளிப்படுத்தக் கூடியதாகும்

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் எட்டு அடுக்குகளாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு இருப்பதனால் அதிகப்படியான வெப்பத்தினை தடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது

HI-RES ஆடியோ சான்றிதழ்  பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அமைப்புகளைக் கொண்டுள்ளதால்  டால்பி,WCD9385 ஆடியோசிப்ஸ் கொண்டிருப்பதனால் ஸ்டீரியோ மற்றும் டால்பி ஆடியோக்களை மிகச் சிறப்பான ஆடியோக்களை வெளியிடுவதில் சிறந்து விளங்குகிறது

ஸ்டீல் பிளாக், பேப்பர் ஒயிட், பேப்பர் கிரீன் என்ற மூன்று வகையான வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன

Sensor

ஒளி உணரி வண்ண, வெப்பநிலை சென்சார், பிராக்சிமிடி சென்சர், கைரோ மீட்டர், முடக்கம் சென்சார், ultra-fast இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்,

இதயத் துடிப்பு சோதனை சென்சார்கள், மற்றும் கைரேகை சென்சார், உடன் இணைக்கப்பட்டுள்ளது காந்த தூண்டல் சென்சார், என் எஃப் சி, போன்ற சென்சார்களை கொண்டுள்ளது

More future

நெட்வொர்க் இணைப்புகளை பொறுத்தவரை2G,3G,4G,மற்றும்5G நெட்வொர்க்  ஆதரவை கொண்டுள்ளது இதில் 5G  இல் 7வகையான 5G BAND ஆதரவை அளிக்கிறது

Wi-fi6, ப்ளூடூத்5.2, ப்ளூடூத் வழியாக SBC, AAC, aptx, aptxHD, LDAC போன்ற ஆடியோ வகைகளை ப்ளூடூத் வழியாக ஆதரிக்கிறது 

 REALME GT 2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையாக 35,000 என்ற விலைகளில் கிடைக்கின்றன, இதன் சிறப்பம்சங்களைப் பார்க்கும்பொழுது விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் வழங்கக்கூடிய நிறைய சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது

இருப்பினும் இது பிளாக் ஷீப் ஸ்மார்ட்போன் என்று கூற இயலாது.ஏனென்றால் பிளாக் ஷீப் ஸ்மார்ட்போன்களில் வழங்கக்கூடிய பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்படவில்லை 

இருப்பினும்இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள பிராசஸர் மற்றும் வடிவமைப்பு என்று பார்க்கையில் இந்த விலைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் என்றே கூறலாம்

அத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுகின்றன 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *