poco m4pro 5G v/s poco m4pro which is the best smartphone?

Poco m4pro 5g v/s poco m4pro,6.6inch,LCD,full HD+,240hz,மீடியா டெக் டைமண்ட் சிட்டி810,5G,5000mah,33w,50+8mp,poco m4pro,6.43inch,AMOLED,fullhd+,மீடியா டெக் heilo G96,64+8+2mp,போன்ற சிறப்பம்சங்களை கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும்

வருகின்ற மார்ச் மாதம் 7ஆம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது .POCO M4PRO 5G மற்றும்POCO M4 PRO இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை பற்றியும் காணலாம் மற்றும் இதன் நிறை குறைகள் பற்றி முழு விமர்சனமாக  காணவிருக்கிறோம். இந்த இரண்டு ஸ்மார்ட்  போன்களின் விலை ஏறத்தாழ ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகும். நீங்கள் இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் எதை தேர்வு செய்வீர்கள்? அப்படித் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போன் உங்களுக்கு எந்த சிறப்பம்சம் உங்களுக்கு அதிகமாக பிடித்திருக்கிறது?

POCO M4 PRO 5G

Display

6.6inchகொண்ட IPS LCD full HD+  டிஸ்ப்ளேவை பெற்று 2400×1080 பிக்சல் ரேசொலியேசன் உடன் 90Hz  திரையின் வேகத்தை பெற்று 240Hz தொடு திரையின் அளவை பெற்று வருகிறது. இந்த டிஸ்ப்ளேவில் DCI P3 (wide color gamut)  பரந்த  வண்ணங்களை அளிக்கிறது 

அத்துடன் இது sunligt டிஸ்ப்ளே என்று poco தரப்பில் கூறப்படுகிறது எந்த டிஸ்ப்ளேவில்  மேல் பகுதியில் மையத்தில்  துளை ஒன்றை(Punch hole display) பயன்படுத்தி அதில் முன்பக்க கேமராவை பதிக்கப்பட்டுள்ளது இந்த டிஸ்ப்ளேவில் 1000nits  பிரைட்னஸ் பெற்றுவருகிறது 

Designing

Poco m4 pro 5G ஸ்மார்ட்போனின் உயரம் 163.56mm அகலம்75.78mm கொண்டுள்ளது  கணத்தை பொருத்தவரை 8.75mm  தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 195g  எடையை பெற்று வருகிறது. உடலமைப்பை பொருத்தவரை பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

Poco M வரிசை என்பதை தனித்துக் காட்டும் வண்ணமாக கேமரா பகுதியை சுற்றி கருப்பு வண்ணத்தில் அமைத்து வலது பக்கமாக poco  என்ற பெயரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை  கிளாசிக் போகோ டிசைன் என்று poco  தரப்பில் கூறப்படுகிறது

வலதுபக்க பக்கவாட்டில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பவர் பட்டன் உள்ளே பதிக்கப்பட்ட சைடு மௌண்ட் பிங்சர்ப்ரின்ட்  சென்சாரை பெற்று வருகிறது.

இடதுபக்க பக்கவாட்டில் சிம்கார்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்தக்கூடிய சிம் ஸ்லாட் கொண்டுள்ளது.இரண்டு சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில் 5G ஆதரிக்கிறது 

 கீழ்பகுதியில்3.5mm ஆடியோ ஜாக் மற்றும் முதன்மை மைக்ரோபோன்(Primary mic) அதனை அடுத்து முதன்மை ஸ்பீக்கர் கொண்டுள்ளது 

மேல் பகுதியில் IR  ரிமோட் சென்சார்  இரண்டாம் நிலை ஸ்பீக்கர், மற்றும் இரண்டாம் நிலை மைக்ரோபோன்(Noise cancellation mic)  போன்றவற்றை மேல்பகுதியில் பெற்றுள்ளது 

Processor

Poco m4 pro 5g v/s poco m4 pro,இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களி M4PRO 5Gஸ்மார்ட்போனில்  மீடியாடெக் டைமன் சைட் 810 ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பிராசஸர் 6nm இல் உருவாக்கப்பட்ட பிராஸ்ஸேர்,

ஆக்டாகோர்2.4Ghz  கிளாக் ஸ்பீடு  கொண்டCPU மற்றும்ARM mali-57 GPU பெற்று வருகிறது.6nmஇல்  உருவாக்கப்பட்டதால்  மிகக் குறைந்த அளவே பேட்டரியின் சக்தியை பயன்படுத்துகிறது இதனால் இந்த ஸ்மார்ட்போனில் அதிக நேரம் பேட்டரியின் சக்தி நீடிக்கும் 

storag

உள்ளடக்க நினைவிடத்திற்கு UFS 2.2 நினைவகத்தை பெற்றுள்ளது,LPDDR4X வகையை சார்ந்த RAM பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மீடியாடெக் டைமன் சைட் 810 இந்த  பிராசஸர் 5g  ஆதரவு இருப்பதனால் இரண்டு சிம் காடுகளிலும் ஒரே நேரத்தில் 5G  ஆதரவை வழங்குகிறது .

நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் இந்த ஸ்மார்ட்போனில் (Virtual Ram )இருப்பதனால் உங்கள் ஸ்மார்ட் போனில் RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள கூடிய சிறப்பம்சம் பெற்றுள்ளது.

உங்களில் எத்தனை பேருக்கு இந்த (விர்ச்சுவல் RAM) பிடித்திருக்கிறது?.

Operating system

Poco m4 pro 5G ஸ்மார்ட்போனில் MIUI 12.5 உடன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என POCO  தரப்பில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனால், செக்யூரிட்டி அப்டேட் மற்றும்MIUI அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் 

M4 PRO 5G ஸ்மார்ட்போனில் 13 வகையான 5G அலைவரிசைகளை ஆதரிக்கிறது(.flagship Smartphone ) விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய அதிர்வு மோட்டார் X-AXIS LINER motar பயன்படுத்தப்பட்டுள்ளது

இதன் மூலமாக  நீங்கள் டைப் செய்யும் பொழுது மற்றும் நோட்டிபிகேஷன் வரும்பொழுதும் இதில் இருந்து வரக்கூடிய அதிர்வு மிக சிறந்த அனுபவத்தை அளிக்கிறது 

Battery

5000 Mah பேட்டரி திறனை பெற்று 33W type -C சார்ஜர் பெற்றிருப்பதால் ஒரு மணி நேரத்திற்குள்  இந்த 5000Mah  பேட்டரியை 100% முழுமையாக  சார்ஜ்செய்கிறது

Rear camera

50mp முதன்மை கேமராவை பெற்று f/1.8 லென்ஸ் உடன் வருகிறது, இரண்டாவதாக 8mp f/2.2 லென்ஸ் உடன் 119 டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை எடுக்க கூடிய அல்ட்ரா கேமராவை பெற்று வருகிறது,

சில ஸ்மார்ட்போன்களில் நாங்களும் அதிக வகையான கேமராக்களை  வழங்குகின்றோம் என்ற பெயரில் 3,4,5 என கேமராக்களை அடுக்கிக்கொண்டே செல்கின்றார்கள்

ஆனால் poco m4 pro 5g ஸ்மார்ட்போனில் இரண்டே கேமராக்களை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது 

இந்த இரண்டு கேமராக்களை பயன்படுத்தி1080p வீடியோக்களை 30fps முதல் 60fps வரையிலான வீடியோக்களை பதிவு செய்ய இயலும்,720 இல் 30fps  மட்டுமே வீடியோ  பதிவிட இயலும்.

Frond camera

முன்பக்கமாக 16mp f/2.45 லேஸ் கொண்ட கேமராவை பெற்று வருகிறது இந்த  கேமராவின் மூலமாக AI  ஃபேஸ் அன் லாக் செய்வதற்கு இந்த கேமராவை பயன்படுத்தப்படுகிறது

more future

poco m4pro 5g v/s poco m4pro,இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களி poco m4pro 5g பொருத்தவரை  ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், எலக்ட்ரானிக் காம்பஸ்,3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்றவற்றை பெற்று வருகிறது 

POCO M4 PRO

Display

6.43 Inch  full HD+கொண்ட AMOLED DOT  டிஸ்ப்ளே உடன் 2400×1080 பிக்சல் ரேசொலியேசன் உடன் 90Hz  திரையின் வேகத்தை பெற்று வருகிறது இத்துடன்180 Hz திரையின் அளவை  கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளேவில் 1000nits வரையிலான பிரைட்னஸ் கொண்டது, மேலும் இந்த டிஸ்ப்ளேவில்DCI-P3  இருப்பதனால்(COLORS) திரையின் வண்ணங்கள் மிகச்  சிறப்பான வண்ணங்களை வெளிப்படுத்துகிறது

 மேலும் திரையில் Reding mode 3.0 மற்றும் சன்லைட் டிஸ்பிளே, இத்துடன்SGS EYE CARE  சான்றிதழ் பெற்றுள்ளது, இந்தSGS சான்றிதழ் இருப்பதனால் இந்த ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு கண்களில் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்

  இதனால் அதிக நேரம் கட்டுரைகள் படிக்கும் பொழுதும் அல்லது வீடியோக்களை பார்க்கும் பொழுது நீண்ட நேரம் கேம் விளையாடும் பொழுதும் உங்கள் கண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை,

இதுபோன்ற சிறப்பம்சங்கள் வரவேற்கத்தக்கது ஏனென்றால் நாம் அதிக நேரம் திரையில் தான் நேரத்தை அதிகமாக செலவிடுகிறோம்

Designing

Poco m4 pro 5g v/s poco m4 pro,இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களி POCO M4 PRO ஸ்மார்ட்போனின் உயரம் 159.87mm, அகலம் 73.87mm,

இதன் கணம் 8.09mm  இந்த ஸ்மார்ட்போன் எடையைப் பொறுத்தவரை 179.5g  எடை பெற்று வருகிறது உடலமைப்பை பொருத்தவரை பிளாஸ்டிக்கை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது

 போகோ ‘m’  வரிசைகென்றே  தனித்துவமாக கொடுக்கக்கூடிய வடிவமைப்பை பெற்று வருகிறது, வலது பக்கமாக வால்யூம் படம் மற்றும் பிங்சர்ப்ரின்ட் சென்சர் உடன் கூடிய பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது

இடது பக்கமாக சிம்கார்டு பொருத்துவதற்கான சிம் ஸ்லாட் இடம்பெற்றுள்ளது கீழ்பகுதியில் டைப் -C 2.0 சார்ஜிங் போர்டு, முதன்மை ஸ்பீக்கர் மற்றும் முதன்மை மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளது

 மேல் பகுதியில் IR ரிமோட் சென்சார், இரண்டாம்நிலை மைக்ரோபோன் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இரண்டாம்நிலை ஸ்பீக்கர் போன்றவற்றை மேல் பகுதியில் கொண்டுள்ளது இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது,

Battery

5000 Mah பேட்டரி திறனைப் பெற்று 33W type-C  சார்ஜர் கொண்டு வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த 33W சார்ஜரை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு உட்பட்ட நேரத்தில் 5000 Mah  பேட்டரியை 100% முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள இயலும்

Z axis liner motor பயன்படுத்தப்பட்டுள்ள தான்  (vibrate Feedback) உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது

Processor

M4 PRO  ஸ்மார்ட்போனில் மீடியா டெக் இன் helio G96 ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது, இந்த ப்ராசசர் 6nm உருவாக்கப்பட்டதால் பேட்டரியின் சக்தியை மிகக் குறைந்த அளவே செலவிடுகிறது.

CPU  பொருத்தவரை ஆக்டாகோர் உடன் 2.05Ghz clock speed வரை  செல்லக்கூடிய CPUவை பயன்படுத்தப்பட்டுள்ளது,GPU பொருத்தவரை Mali-G57 MC2 பயன்படுத்தப்பட்டுள்ளது

Storage

LPDDR4X RAM  வகையும் UFS 2.2 உள்ளடக்க நினைவகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.RAM அதிகரித்துக்கொள்ள(Virtual Ram) இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் உங்கள் RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்.

Rear camera

64mp  முதன்மை கேமராவை பெற்று f/1.8 லென்ஸ் பெற்று வருகிறது, இரண்டாவது கேமராவை பொருத்த வரை8mp அல்ட்ரா வைட் f/2.2 லென்சை கொண்டு 118 டிகிரி வரை விரிந்த  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது,

மூன்றாவதாக 2mp  f/2.4 லென்ஸ் கொண்ட  பயன்படுத்த பயன்படுத்த படுகிறது இந்த பயன்படுத்தி HDR mode, Night mode. 64 MP mode, Pro photo mode, macro mode, portrait mode phone

வீடியோவை பொருத்தவரை 64mp கேமரா மூலமாக 1080p இல் 30fps மற்றும்60fps வீடியோக்களையும் 720 இல் 120Hz ஸ்லோ மோஷன் வீடியோக்களையும் பதிவிட இயலும்,

8mp அல்ட்ரா வைலட் கேமரா மூலமாக 118 டிகிரி விரிந்த வீடியோக்களை 1080pஇல் 30fps வரையிலும்,720 இல் 30fps வீடியோக்களையும் இயலும்,

2mp கேமராவின் மூலமாக மேக்ரோ போட்டோக்களை மிக அருகாமையில் புகைப்படங்களை  எடுக்கக் கூடியது

Frond camera

முன்பக்கமாக உள்ள 16mp கேமரா  டிஸ்ப்ளேவில்  மேல்  பகுதியின் மையப்பகுதியில்(panch hole)ஒன்றை பயன்படுத்தி அதில் இந்த16mp கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,

இந்த கேமராf/2.4 லென்சை  கொண்டுள்ளது இந்த கேமராவை பயன்படுத்தி  HDR, portrait mode, bokeh and depth, beauty mode, panorama mode, filter mode, movie Prem, shutter போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. இந்த கேமராவை பயன்படுத்தி AI  ஃபேஸ்  அண்ட்லாக் செயல்படுகிறது 

more future

6GB+128GB,8GB+256GBஎன்ற  வேறுபட்ட இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன.

இணைப்புகளை பொறுத்தவரை ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வைபை,IR ரிமோட் சென்சார், பிராக்சிமிடி சென்சர்,  எலக்ட்ரானிக்  காம்பஸ்போன்ற சிறப்புகளைப் பெற்று உள்ளது

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையும்  ஏறத்தாழ ஒரே மாதிரியான விலையை பெற்று வருகிறது இதில் நீங்கள் எந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பீர்கள்? 

என்னுடைய கருத்து என்னவென்றால் poco m4por 5G ஸ்மார்ட்போனில் சிறந்த ப்ராசசர் கொடுக்கப்பட்டுள்ளது

மற்றும் அதன் கேமராக்களும் குறை சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை ஆனால் டிஸ்பிலே என்று வருகையில் IPS LCD  வை கொண்டுள்ளது

ஆனால் M4 PRO  ஸ்மார்ட்போனில் நல்ல கேமரா மற்றும் AMOLED  டிஸ்ப்ளே உடன் வருகிறது மற்ற சிறப்புகள் என்று பார்க்கையில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் மேலே கூறிய சிறப்புகளை தவிர வேற எந்த மாற்றங்களும் இல்லை

அந்த வகையில் அதிகப்படியான கேம் விளையாடுவதற்கு சிறந்த ஸ்மார்ட்போன் எதுவென்றால் M4PRO 5G  ஸ்மார்ட்போன் என்று கூறலாம்.

அப்படியானால்M4PRO  ஸ்மார்ட்போன் கேம் விளையாடுவதற்கு தகுதி இல்லையா என்று நீங்கள் நினைக்க வேண்டாம் ஹை கிராஃபிக்ஸ் கேம்களை விளையாடுவதற்கு இந்த ஸ்மார்ட்போன் சற்று தடுமாற்றத்தை பெறுகிறது.

ஆனால் 5ஜி  இந்த M4PRO ஸ்மார்ட்போனில் இல்லை என்பதை கவனிக்க கூடிய ஒன்றாகும்.

உங்களுக்கு அதிக கேம் விளையாட ஆர்வம் இருப்பவர்களாக இருந்தால் நீங்கள் M4PRO 5G ஸ்மார்ட் போனை தேர்வு செய்யலாம்.

உங்கள்அதிகமாக கேம்களை விரும்ப மாட்டேன் எப்பொழுதாவது விளையாடுவேன்  என்பவர்களுக்கும்

அதிகமாக வீடியோ மற்றும் சோசியல் நெட்வொர்க் பயன்படுத்துபவராக இருந்தால்  நீங்கள்M4 PRO ஸ்மார்ட் போனை தேர்வு செய்யலாம் 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *