Redmi note 11pro specifications and full reiviw

Redmi note 11pro specifications, 6,67 inch, ful HD, AMOLED,120Hzபுதுப்பிப்பு தன்மை, 360Hzதொடுதல் மாதிரி விகிதம்,1200nitsபிரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ்5, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 108 mp+8mp+2mp,16mpமுன்பக்க கேமரா, மீடியா டெக் helio G96ப்ராசசர் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ரெட்மி ஸ்மார்ட் போன்

 Redmi note  வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது தற்போது நோட் வரிசையில் பல ஸ்மார்ட் போன்கள் இருந்தபோதிலும் note 11pro என்ற ஸ்மார்ட் போனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டும் note 11 வரிசையில் எத்தனை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

Note 11T 5G,note 11,note 11pro max, note 11 5g,note 11pro+, note 11s,இத்தனை ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய redmi  ஸ்மார்ட்போன் நிறுவனம் வரிசைப்படுத்தி  களமிறங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

ஆனால்  மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் விதமாக முதலில் note 11t அறிமுகப்படுத்தியது பின்புnote11 என மாற்றி மாற்றி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது

மக்களிடையே எந்த ஸ்மார்ட்போனில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பதை மக்களால்நினைவில் வைத்துக் கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது

REDMI  NOTEஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் மக்களிடையே குழப்பம்  ஒன்றுதான் மீதம் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை 

தற்போது களமிறங்கியுள்ள note 11 pro  வருகின்ற 23 மார்ச் அன்று விற்பனைக்கு வருகின்றன தற்போது நாம் காணவிருப்பது note 11pro  இந்த Redmi note 11pro specifications, ஸ்மார்ட்போனை பற்றி முழுவிமர்சனமும் இந்தக் கட்டுரையில் காணலாம் 

Redmi note 11 pro

Display

6.67 இன்ஸ் கொண்ட full HD+ AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz திரையின் வேகத்தைப் பெற்று வருகிறது 1200 nitsபிரைட்னஸ் ரோடு 395ppi திரையில் தெளிவுத்திறன் உடன் 360Hz தொடுகிறேன் அளவை பெற்று உள்ளது மேலும் இந்த டிஸ்ப்ளேவில்  reding mode 3.0 கொண்டிருப்பதனால் இரவு நேரங்களில் உங்கள் கண்களுக்குபாதிப்புகள் குறைவாக இருக்கும் என  ரெட்மி நிறுவனத்தால்  கூறப்படுகிறது.

மேலும்100%DCI-P3 (widecolor gamut)கொண்டிருப்பதனால் உங்கள் ஸ்மார்ட் போனில் வண்ணங்களை மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.(oute doore) சூரிய வெளிச்சம் படுகின்ற இடங்களில்கூட இந்த டிஸ்ப்ளேவில் எந்த ஒரு தங்கு தடையுமின்றி  பயன்படுத்தலாம்

இதற்காகவே 1200nits  பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 164.19mm அகலம்76.1mm தடிமன்8.12mm இதன் மொத்த எடை 202g.

 டிஸ்ப்ளேவில் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது பின்பகுதியில் கண்ணாடி கிளாஸ் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ளது

இந்தக் கண்ணாடி கிளாஸ் எந்த வகையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை ரெட்மி தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.

இந்த மொபைலின் பக்கவாட்டில் ஹாஸ்டல் அமைப்பைப் பெற்றுள்ளது, கீழ்பகுதியில் usb type-C சார்ஜிங் போர்டு முதன்மை மைக்ரோபோன்  சிம் ஸ்லாட் மற்றும் முதன்மை ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது. மேல் பகுதியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இரண்டாம் நிலை ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது

மற்றும் IR ரிமோட் சென்சார்  இரண்டாம்நிலை மைக்ரோ போன், மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் இடம் பெற்றுள்ளது

Designing

இந்த மொபைலில் வலதுபக்கம் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது இந்த பவர் பட்டன் இல்

பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைப்பை கொண்ட பவர் பட்டனை பெற்றுள்ளது.இந்தப் பிங்கர் பிரிண்ட் சென்சாரில் கைரேகை பதித்த உடன் திறையை திறப்பது ஒருவகை,

பவர் பட்டனை அழுத்தி பின்பு திறையைத் திறப்பது என இரண்டு வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்

sim card

Note 11 pro ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்கார்டுகள் ஒரே நேரத்தில் 4g ஆதரவு அளிக்கிறது, அப்படியானால் இதில் 5G  இல்லையா என்று கேட்டால் நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போனில் 5G இல்லை என்பதே உண்மை. ஒரே நேரத்தில் இரண்டு சிம்கார்டுகள்  பயன்படுத்தலாம் ஆனால் நினைவக அட்டையை பயன்படுத்த இயலாது, அதற்கு பதிலாக ஒரு சிம் கார்டு ஒரு நினைவக அட்டை  என பயன்படுத்த இயலும்

Barrery

5000Mah இந்த ஸ்மார்ட்போன் 67W TURBO chargerஉடன் வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது ( சில நிறுவனங்கள் இந்த விலைகளில் வரக்கூடிய ஸ்மார்ட்போன்களில் சார்ஜர்  கொடுக்காமல் வெறும் ஸ்மார்ட்போனை மட்டுமே வழங்குகிறது என்பது தான் இதற்கு காரணம்) 

storeg

நினைவகம் மற்றும் Ram LPDDR4X  வகையைச் சார்ந்த RAM இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது UFS 2.2 வை  உள்ளடக்க நினைவகம்  பயன்படுத்தப்பட்டுள்ளது நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB  வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும் RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள கூடிய RAM BOOST பயன்படுத்துவதன் மூலமாக 11GB  வரையிலான RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என ரெட்மி தரப்பில் கூறப்படுகிறது. இயக்கும் முறையை பொருத்தவரை  ஆண்ட்ராய்டு 11 செயல்பாட்டுடன் MIUI 13 கொண்டு இயங்குகிறது

Rear camera

SAMSUNG GM2   கேமராவான 108mp f/1.9 லென்ஸை கொண்ட இந்த கேமரா(9in1 pixel binning) மூலமாக சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்குகிறது (அதாவது ஒன்பது புகைப்படங்களை ஒரே நேரத்தில் எடுக்கின்றன பின்பு அனைத்து புகைப்படங்களும் ஒன்றாக்கி சிறந்த புகைப்படமாக வெளியிடுகிறது )

இரண்டாவதாக உள்ள கேமரா 8mp f/2.4 லென்ஸ் கொண்ட அல்ட்ரா வைட் கேமராவை பெற்றுள்ளது

இந்த கேமரா 118 டிகிரி வரையிலான  அகலமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்கிறது

மூன்றாவதாக 2mp f/2.4 லென்ஸ் கொண்ட கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது,  நான்காவது கேமராவாக 2mp f/2.4 லென்ஸ் கொண்ட வெப்கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த  கேமராக்களை பயன்படுத்தி ஃபுல் ஹெச்டி 1080p  வீடியோக்களை 30fps இல் பதிவிடுகிறது 720 HD இல் 30 FPS வரையிலான வீடியோக்களை பதிவிடுகிறது

Frond camera

முன்பக்க  கேமராவை பொருத்த வரை 16mp f/2.4 லென்ஸ்  கொண்டு சிறந்த புகைப்படங்களை வழங்குகிறது  இந்த கேமராவை பயன்படுத்தி வீடியோக்களை  பதிவிடும் பொழுது  ஃபுல் ஹச் டி 1080p இல் 30 fps  வீடியோக்களையும் 720 இல் 30 fps வீடியோக்களை பதிவிடுவது,முன்பக்கமாக உள்ள செல்பி கேமராவை பயன்படுத்தி AI FACE UNLOCK  பெற்றுள்ளது 

Processor

பிராசஸர் பொருத்தவரை mediatek Helio G96 பிராஸஸரை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது,

இந்தப்  பிராசசர் உடன் ஆக்டாகோர் 2.05GHZ வரையிலான  கிளாக் ஸ்பீடு பெற்று உள்ளது GPU  பொருத்தவரை ARM Mali G57 MC2  பயன்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த ப்ராசசர் 6nm கொண்டு உருவாக்கப்பட்டதால் குறைந்த அளவே பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்றது.G96  பிராசஸர் அவர்களுக்கு சிறந்த அனுபவத்தை  வழங்கக்கூடிய பிராசஸர் ஆகும், விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் Z-Axis  Linear Vibration motorபயன்படுத்தப்பட்டு உள்ளதால் கேம் விளையாடும் பொழுது சிறந்த அதிர்வு தன்மையை வழங்குகிறது மேலும் நீண்ட நேரம் விளையாடும் பொழுது இந்த ஸ்மார்ட்போன் வெப்பம் ஆகக் கூடாது என்பதற்காக LIQUD COOLING தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருப்பதினால் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது

More future

மேலும் இதில் உள்ள சிறப்பம்சங்கள்wi-fi, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், HI-RES ஆடியோ,

ஸ்டீரியோ ஸ்பீக்கர், IR ரிமோட் சென்சார், காம்பஸ், லைட் சென்சார் போன்றமேலும் பல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது

PROS &  CONS

Redmi note 11pro specifications ஸ்மார்ட் போனை பற்றிய உங்களுடைய கருத்துக்கள் என்ன?

அதற்கு முன்பாக என்னுடைய கருத்துக்களை இங்கு பதிவிட விரும்புகிறேன். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் விலையாக 6GB+128GB கொண்ட ஸ்மார்ட்போன் 17,999 என்ற விலையில் கிடைக்கின்றன,

ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகமாகவே  இருக்கின்றன ஏனென்றால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள G96 பிராசஸர் இந்த ப்ராசசர்  எந்த விதத்திலும் சளைத்தது அல்ல

ஆனாலும் இந்தப் பிராசஸர் இந்த விலை பொருந்தாது என்பதே என்னுடைய கருத்தாகும், கையில் பிடித்து பயன்படுத்துவதற்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறப்பான அனுபவத்தை அளிக்கிறது அதற்கு காரணம் பிற்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள கண்ணாடி கிளாஸ்  அமைப்பே காரணம்,

சற்று  கவன குறைவாக இருந்தால் உங்கள் கையை விட்டு நழுவிச் செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் கொள்ளவும், இதன் வடிவமைப்பு இன்னும் சிறப்பானது என்றே கூறலாம் மேலும் இதில் GM2 கேமரா சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது  இந்த கேமரா சென்சார் சரியான முறையில் அல்காரிதம் செய்யப்பட்டு இருந்தால் இன்னும் சிறப்பான புகைப்படங்களை அளிக்கும் என்பது என்னுடைய கருத்தாகும்.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் வெளியாக மட்டுமே 17.999  இருக்கும்  இன்னும் சிறிது நாட்களில் விலை அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது

அப்படி விலை உயரும் பொழுது இந்த ஸ்மார்ட்போன் அந்த விலைக்கு  ஏற்றதுதானா என்பதை பற்றிய உங்களுடைய  கருத்துக்களை பதிவிடுங்கள் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *