NOTHING PHONE 1

Nothing phone 1 full Review pros & cons India price

Nothing phone 1 என்ற பெயரில் தற்போது உலகிற்கு புதிதாகக் களம் இறங்கி இருக்கும் ஸ்மார்ட்போன் தயாரிக்கக்கூடிய நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டது இந்த நிறுவனம் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் சென்னையில் ஸ்மார்ட் போன்கள் தயாரித்து வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன் Nothing phone-1என்ற பெயரில்  புதிய ஸ்மார்ட்போனை ஜூலை 12 Nothing phone-1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

ஜூலை 15 ஆம் தேதி பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த Nothing phone-1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்ன?, மற்ற ஸ்மார்ட் போன் தயாரிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை காட்டிலும் என்னவெல்லாம் சிறப்பம்சங்கள் உள்ளன என அனைத்தையும் முழுவதுமாகக் காணலாம்.

Display future

6.55inchகொண்ட OLED  டிஸ்ப்ளேவை பெற்று(1080×2400) Full HD பிக்சல் ரேசொலியேசன் கொண்டுள்ளது.442(PPI) பிக்சல் அடர்த்தி அதாவது(டிஸ்ப்ளேவில் ஒரு இன்ச் அளவில் 402 பிக்சல் அடர்த்திணை  கொண்டுள்ளது) பிரைட்னஸ் பொருத்தவரை 500 nits  முதல் 1200 nits வரையிலான பிரகாசத்தை கொண்டுள்ளது.240Hz வரையிலான தொடுதல் மாதிரி விகிதத்தினை                        (Touch Response)பெற்றுள்ளது.

NOTHING PHONE 1

 

120Hz  திரையின் புதுப்பி தன்மையைக் கொண்டது. ஆனால் தானியங்கியாகச் செயல்படும்பொழுது 60Hz,90Hz,120Hzஎன்ற மூன்று விகிதத்தில் செயல்படுகிறது,

தானியங்கியாகச் செயல்படுத்தும்பொழுது பேட்டரியின் சக்தியை மிகக் குறைவாகவே செலவிடுகிறது.120Hz இல் நிலையாகசெயல்படுத்தும்பொழுது வேகமாகவும், மென்மையாகவும் இருக்கின்றது.

அதே சமயத்தில் தானியங்கியாகச் செயல்படுவதை நிலையாகப் பயன்படுத்தும் போதும் பேட்டரியின் சக்தி அதிக அளவில் செலவிடுகிறது திரையின் பாதுகாப்பிற்காகக் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டர்+ பயன்படுத்தபடுகிறது.20.9தோற்ற விதத்தினை கொண்டுள்ளது.

Biometric

OLED டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ள இந்த நத்திங் ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது

மேலும் ஃபேஸ் அண்ட் லாக் செய்வதற்கு முன்பக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள செல்பி  கேமராவின் மூலமாகச் செயல்படுகிறது 

NOTHING PHONE 1

HDR10+கொண்ட டிஸ்ப்ளே என்பதால் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ், யூடியூப் போன்றவற்றில் HDR வீடியோக்களைக் காண இயலும். மேலும் பல விரல்களை ஒரே நேரத்தில்(Multi-Touch)பயன்படுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Designing

Nothing phone-1 இன்  உயரமானது 159.2 mm, அகலம் 75.8 mm, தடிமன் 8.3 mm,193.5gஎன்ற எடை கொண்டுள்ளது. Nothing ஸ்மார்ட் போன் ஆனது கீழ்பகுதியில் பிரைமரி மைக்ரோபோன், முதன்மை ஸ்பீக்கர், Type-c சார்ஜிங் போர்டு sim slot போன்றவற்றை இடம்பெற்றுள்ளது,

வலது  பக்கம் பக்கவாட்டில் பவர் பட்டன், இடது பக்கம்  வால்யும்  பட்டன் இடம்பெற்றுள்ளது.

NOTHING PHONE 1

Nothing ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் அலுமினியம்  பயன்படுத்தப்பட்டுள்ளது பின்பகுதியில் கண்ணாடி உடல் அமைப்பைக்  கொண்டுள்ளது உடலமைப்பின்  பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த nothing ஸ்மார்ட் போன் வடிவமைப்பைக் காணும்போது I PHONE போன்ற வடிவமைப்பைப் பயன்படுத்தப்பட்டுள்ள BOX  வடிவமைப்பைப் போன்ற காட்சி அளிக்கிறது இருப்பினும்,

பின்பகுதியில்பயன்படுத்தப்பட்டுள்ள GLYPH LED லைட்ஸ் மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும்போது 

Nothing ஸ்மார்ட் போன் தான் என்பதை தனித்துவமாகக் காட்டுவது இந்த GLYPH LED  லைட் க்கு என்றே பிரத்தியேகமாக GLYPH interspace அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

இதன் மூலமாக இந்த LED லைட்டுகளை கட்டுப்படுத்தலாம் சார்ஜ் செய்யும்பொழுது  பேட்டரியின் அளவை காண்பிக்கின்றன, குறுந்தகவல் வரும்பொழுதும், அழைப்புகள் வரும்பொழுதும் எனப் பலவித செயல்பாட்டிற்கு ஏற்றவாறு உங்கள் விருப்பம்போல் அமைத்துக்கொள்ளலாம்,

NOTHING PHONE 1

மேலும் IP53 சான்றிதழ் பெற்ற தூசு புகாத் தன்மையும், சிறுதுளி நீர், வேர்வை போன்ற சிறு துளி நீர் படும்பொழுது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை, ஆனால் நீர் புகாத் தன்மைக்கான சான்றிதழ் பெறப்பட வில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

Operating system

 ஆண்ட்ராய்ட் 12 உடன் nothing  நிறுவனத்தின் சொந்த OS ஆன பயன்படுத்தப்படுகிறது nothing நிறுவனம் உறுதி அளித்திருப்பது என்னவென்றால்

மூன்று வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் நான்கு வருடங்களுக்குச் செக்யூரிட்டி அப்டேட் களும் கிடைக்கும் என உறுதி அளித்துள்ளது

NOTHING PHONE 1

Baterry

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய 4500mah பேட்டரி  திறனைப் பெற்றுள்ளது. இந்தப் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 33W,pd சார்ஜிங்  வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு அளிக்கின்றது.nothing ஸ்மார்ட் போனுடன் சார்ஜர் கொடுக்கப்படுவதில்லை என்பதால் 33W pd சார்ஜர் தனியாகத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

Wireless charging

மேலும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை பெற்றுள்ளது இந்த வயர்லெஸ் சார்ஜிங் 15W வரை ஆதரிக்கின்றது, அதுமட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்குகிறது

இந்தச் சார்ஜ் மூலமாக 5W வரையிலான அவுட்புட்  வழங்குகிறது, இதன் மூலமாக ஸ்மார்ட் வாட்ச்அல்லது TWS  இயர்போன் போன்றவற்றில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருப்பின்

இந்த NOTHING PHONE 1  ஸ்மார்ட் போன் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மூலமாகச் சார்ஜ் செய்து கொள்ளலாம் 

Storage Type

LPDDR5 RAM வகையும் UFS 3.1 உடன் கூடிய உள் சேமிப்பை பயன்படுத்தி, 8 GB+128 GB,8 GB+256 GB,12 GB+256 GB என்ற மூன்று வகை உள் சேமிப்புகளுடன் இரண்டு வகை RAM வகைகளும் கிடைக்கின்றன. விர்ச்சுவல் RAM மூலமாக RAM நினைவகத்தை அதிகரித்துக்கொள்ளலாம். நினைவக அட்டை பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை.

NOTHING PHONE 1

Sim card

இரண்டு சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்தும் வசதியை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது இந்த இரண்டு சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில்

4G மற்றும் 5G இணைப்புகளை இரண்டு சிம் சிம்கார்டுகளிள்லும் ஒரே சமயத்தில் வழங்குகிறது 

NOTHING PHONE 1ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்கார்டுகள்  பயன்படுத்த இயலும்  ஆனால் நினைவக அட்டை பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது 

Processor

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 778+G பிராஸ்ஸேர் படுத்தப்பட்டுள்ளது இந்தப் பிராஸஸரை ஆதரிக்கும் வகையில் 

ஆக்டாகோர் (2.5ghz,single core, kryo 670+2.4ghz Tri core, kryo 670+1.8ghz, quad-core, kryo 670)வகை CPU, Adreno 642L GPU பயன்படுத்தபடுகிறது.

இது ஒரு 5G பிராஸ்ஸேர்,6 nm உருவாக்கப்பட்ட  மிட்ரோவில் மிகவும் சக்தி வாய்ந்த பிராசஸர் ஆகும்

NOTHING PHONE 1

 Rear Camera

 மூன்று  நான்கு கேமராக்கள் கொடுக்காமல் சிறப்பான இரண்டு கேமராக்கள் கொண்டு வருகிறது இதில் முதன்மை கேமராவாக Sony IMX 766,F/1.88லென்ஸை கொண்ட 50mp கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக Samsung JN-1, 50mp,f/2.2 லென்சை கொண்ட அல்ட்ரா  வைட்ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த ultra-wide கேமரா மூலமாக 140 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்கிறது.

பயன்படுத்தி OIS ஆதரவு, ஆட்டோ போகஸ், HDR டிஜிட்டல் ஜூம், PRO mode, எனப் பலவிதமான சிறப்பம்சங்களுடன் கொண்டுள்ளது, வீடியோவில் 4K (3840×2160) மற்றும் Full HD (1080×1920) இல் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவு செய்கிறது. Full HD இல் ஆவது @60fps வரையிலான வீடியோ பதிவு செய்யும் விதமாகக் கொடுத்திருக்கலாம்.

Frond camera

16mp,f/2.25லென்ஸை கொண்டா SONY IMX 471 ஒற்றை கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவின் மூலமாகப் போட்டோஸ், போர்ட்ரைட்  மோடு, HDR, ஒயிடு செல்பி, ஆட்டோ போகஸ், பியூட்டி, பிட்டர் போன்ற புகைப்படங்களைப் பதிவிட இயலும் வீடியோவில் Full HD(1920×1080)இல் @30fps  வரையிலும், HD (720) இல் @30fps வரையிலான வீடியோக்களைப் பதிவு  செய்கின்றன

NOTHING PHONE 1

Audio type

ஆடியோ என்று வருகையில் nothing  ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஆடியோவை ஆதரிக்கின்றன ஆனால் 3.5 mm ஆடியோ ஜாக் கொடுக்கப்படவில்லை.டால்பி அட்மாஸ் ஆடியோவை ஆதரிக்கின்றது

Network and Connectivity

2G,3G,4G,5Gஆதரவை வழங்குகிறது, wifi-6,hotspot, ப்ளூடூத் -5.2,GPS, A-GPS, NFC, ஸ்டீரியோ ஸ்பீக்கர் வயர்லெஸ் சார்ஜிங், light சென்சார்  proximity, Accelerometer, compass, gyroscope போன்ற sensor மற்றும் இணைப்புகளைக் கொண்டுள்ளது.

NOTHING PHONE 1

Advantage

சிறந்த OLED டிஸ்ப்ளேவை கொண்ட இந்த NOTHING  ஸ்மார்ட்போனில் HDR 10+  கொண்டிருப்பது  மிகச் சிறந்த வரவேற்பு எனக் கூறலாம் டிஸ்ப்ளே என்று வருகையில் எந்த ஒரு குறைபாடும் இல்லை, HDR வீடியோக்களைக் காணும்பொழுது உங்களுக்குச் சிறந்த காணொளி காட்சிகளைத் துல்லியமாகவும் வழங்குகிறது அதே சமயத்தில்  காணொளிக்  காட்சிக்கு ஏற்றவாறு ஸ்பீக்கர் கொண்டிருப்பதனால் மேலும் உங்களது அனுபவத்தைச் சிறப்பாக இருக்கிறது

கேமிங் பிரியர்களுக்கு இந்த நத்திங் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் என்று கூறலாம் ஏனென்றால்  Mid-range பிராசஸர்களில்  சிறந்த பிராசஸர் ஆன குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 778+  கொடுக்கப்பட்டுள்ளது இந்தப் பிராசசர் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தக்கூடிய  பிராசசர் ஆகும். அதே சமயத்தில் இந்தப் பிராசசர்  பிளாக் ஷீப் ப்ராசசர் அல்ல என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் பிளாக் ஷீப் பிராசஸர் அளவிற்கு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லை, இது   ஒரு  நடுத்தர பிராசஸர். 

 இருப்பினும் உங்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து மல்டி டாஸ்கிங், மற்றும் கேமிங்  போன்றவைகளுக்கு ஏற்றச் சிறந்த பிராசஸர்  என்பதில் எந்த மாற்றம் இல்லை

மீட்ரேஞ்சில்  சிறந்த ப்ராசசர், புதுவிதமான வடிவமைப்பு சிறந்த கேமரா கொண்டுள்ளது. என அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குகிறது nothing phone,

Disadvantage

டிஸ்ப்ளேவில் Flat ஆன டிஸ்பிலே அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது  அதற்குப் பதிலாக 3.5 mm வளைந்த டிஸ்ப்ளே கொடுத்திருக்கலாம்,3.5 ஆடியோ ஜாக் கொடுக்கப்படவில்லை, சார்ஜர் கொடுக்கப்படவில்லை,4Kவில் கூட 30fps என்பதே சரிதான் ஆனால் Full HD இல் 30fps மட்டுமே வீடியோவைப் பதிவு செய்கிறது நினைவக அட்டை பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை

Price

ஆரம்ப விலை 8 GB+128 GB        31,999

                                8 GB+256 GB        34,999

                               12 GB+256 GB     37,999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *