Oppo Reno 8pro- 5g, Full specification review, and India price (July 2022)

OPPO RENO 8PRO

Oppo Reno 7மற்றும் 7pro  ஸ்மார்ட்போன்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த Reno 8,8pro என்ற புதிய ஸ்மார்ட்போன்களை 18 ஜூலை அன்று அறிமுகப்படுத்தியது ஒப்போ நிறுவனம், Reno 7,7proஸ்மார்ட் போன்களில் புதுமையான  வடிவமைப்பு உடன் அறிமுகப்படுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்துவந்த

Reno 8,மற்றும் 8pro ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் புதுவிதமான கட்டமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா, பிளாக் ஷீப் பிராஸ்ஸேர் என அனைத்திலும் புதுவிதமான மாற்றங்களைக் கொண்டுவரப்பட்டுள்ளது,

Reno 8pro 45,999என்ற விலையிலும், Reno 8,29,999என்ற விலைகளிலும் பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ ஆப்லைன் ஸ்டோர், oppo.com வலைதளங்களில் ஜூலை மாதம் 25ஆம் தேதி அன்று விற்பனையாகும்    

Oppo reno 8pro  ஸ்மார்ட்போனில்  கேமராவில் புதுவிதமான என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன மற்றும் எந்த வகையான கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன,

புது விதமான தொழில்நுட்பங்கள் எவையேனும்  பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் போன்ற பலவிதமான சந்தேகங்கள் அனைத்தையும் முழுமையான விமர்சனமாகக் காணலாம்,

oppo ஸ்மார்ட்போன்களை பற்றிய உங்களுடைய கருத்துக்கள் என்ன? என்பதை பற்றி உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Display

6.7இன்ச் கொண்ட super AMOLED  டிஸ்ப்ளேவை பெற்று, (1080×2412) Full HD+ பிக்சல் ரேசொலியேசன் கொண்ட இந்த டிஸ்ப்ளேவில்

394(PPI)என்ற அளவில் பிக்சல் அடர்த்திஇணை பெற்றுள்ளது 20.9என்ற தோற்ற விகிதம் பெற்றுள்ளது,

OPPO RENO 8PRO

120Hzதிரையின் புதுப்பிப்பு தன்மையுடன்,244Hz தொடுதல் மாதிரி விகிதத்தினை கொண்டுள்ளது, HDR,HDR10+, மற்றும் டால்பிவிஷன்,4Kவீடியோ ஆதரவையும் இந்த டிஸ்ப்ளேவில் வழங்குகிறது, மல்டி கெப்பாசிட்டி டச் மூலமாக ஒரே நேரத்தில் பல விரல்களைக் கொண்டு செயல்படுத்தலாம்,

950 nits பிரைட்னஸ் கொண்டுள்ளதால் நேரடி வெயில் படுகின்ற இடங்களில்கூட பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தடங்கலும் இல்லை,

punch-hole டிஸ்ப்ளேவை கொண்ட இந்த Oppo Reno 8proஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் இடம்பெற்றுள்ளது, திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது 

OPPO RENO 8PRO

மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காணும்பொழுது வண்ணங்களை(color boost) அதிகரித்துக் கொள்ளும் பொழுதுக் காட்சிகள் இன்னும்  சிறப்பான அனுபவத்தை அளிக்கிறது

ஆனால் இதைப் பயன்படுத்தும்போது பேட்டரியின் சக்தியைச் சற்று அதிகமாகவே செலவிடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

HDR வீடியோக்களைக் காணும்பொழுது தானாகவே பிரைட்னஸ் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றாலும் அதையும் அமைத்துக் கொள்ள இயலும்

இந்த இரண்டு  வகைகளும் பேட்டரியின் சக்தியை அதிகப்படியாகவே செலவிடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

 இரண்டுவகையான புதுப்பிப்பு தன்மையை மட்டுமே கொண்டுள்ள நிலையில்  சாதாரணமாகப் பயன்படுத்தும்பொழுது 60Hz இல் செயல்படுகிறது, இன்னும் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்120Hz  இல் பயன்படுத்தலாம்.

தானியங்கியாகச் செயல்பட இல்லாவிட்டாலும் 60Hz அல்லது 120Hz இல் மட்டுமே நிலையாகப் பயன்படுத்த இயலும்.IP54சான்றிதழ் பெற்றுள்ளதால் தூசு மற்றும் சிறு துளி நீர்(Splash and dust) படும்பொழுது எந்தவித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை 

டிஸ்ப்ளே அமைப்பில் கூடுதல் சிறப்பம்சமாகும் மல்டி டிஸ்ப்ளே என்னும் சிறப்பம்சம்  புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த அமைப்பின் மூலமாக

விண்டோஸ் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் திரையில் உங்களது ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளேவை முழுமையாகக் காணலாம் 

அல்லது கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேவை உங்களது ஸ்மார்ட்போனில் முழுமையாகக் காண்பது மட்டுமின்றி செயல்படுத்தவும் இயலும்

oppo reno 8pro

 இதன் மூலமாக உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்களது லேப்டாப் அல்லது கணினியில் மிக  எளிமையான முறையில்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

Design

7.3 mm மெலிதான தடிமனை கொண்ட Reno 8pro ஆனது161.2 mm உயரமும்,74.22 mm அகலத்தையும் கொண்டு,183g இடைநிலை பெற்றுள்ளது. பின்பகுதியில் அமைப்பைப் பெற்றுள்ளது இந்தக் கண்ணாடி உடல் அமைப்பானது கார்னிங் கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் எந்த வகை சார்ந்தது என அறிவிக்கப்படவில்லை.

oppo reno 8pro

Reno 7proஸ்மார்ட் போனில் கேமரா பகுதியைச் சுற்றியும் செராமிக் பயன்படுத்தப்பட்டது இருந்தது ஆனால்

Reno 8pro ஸ்மார்ட் போனில் கேமரா பகுதியில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் ஒரே கண்ணாடி கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது

 மெட்டல் பிரேம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மேட்டர் பிரேமின் வலது பக்கம் பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது, கீழ்ப்பகுதியில் முதன்மை மைக்ரோபோன்,

முதன்மை ஸ்பீக்கர், USB type-C சார்ஜிங் போர்டு, சிம் ஸ்லாட் இடம் பெற்றுள்ளது,

 மேல் பகுதியில் இரண்டாம் நிலை Noise cancellation மைக்ரோபோன், இரண்டாம்நிலை ஸ்பீக்கர், ஆம் Reno 8pro  ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது.

Glazed Green, Glazed Black என்ற இரண்டு வகையான வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன 

Processor

மீடியாடெக் டைமன் சைட் 8100MAX (mt6895z)ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த ப்ராசசர் ஆனது ஒரு பிளாக் ஷீப் ப்ராசசர்  ஆகும், இந்த ப்ராசசர் ஆதரிக்கும் வகையில்

அக்டோகோர்,2.85Ghz quad-core, cortex A78+2Ghz quad-core, cortex A55 CPU பயன்படுத்தப்பட்டுள்ளது,

GPU விற்கு Mali-G61 MC6 பயன்படுத்தப்பட்டு செயல்படும் இந்த மீடியாடெக்  டைமன் சைட் 8100MAX 5 nm உருவாக்கப்பட்ட ஒரு 5G பிராசஸர் ஆகும்

Operating system

ஆண்ட்ராய்டு 12 உடன் color OS 12.1 கொண்டு செயல்படுகிறது ஆண்ட்ராய்ட் அப்டேட் இரண்டு வருடங்களுக்கும்

செக்யூரிட்டி அப்டேட் நான்கு வருடங்களுக்கு வழங்கப்படும் என OPPO தரப்பில் உறுதி  அளிக்கப்பட்டுள்ளது 

Rear camera

மூன்று வகையான கேமராக்களை  பயன்படுத்தப்பட்டுள்ளது அதில் முதன்மை கேமராவாகப் பிளாக் ஷீப் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய

SONY IMX 766 50mp,f/1.8 லென்சை கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, RENO 7PRO ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட அதே கேமராவை தான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது

 இரண்டாவது கேமராவாக SONY IMX 355 8MP,F/2.2அல்ட்ரா வைட் கேமராவைப் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த அல்ட்ரா வைலட் கேமராவை பயன்படுத்தி 122 டிகிரி வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட இயலும்,

மூன்றாவது கேமராவாக 2mp,f/2.4 லென்சை கொண்ட மேக்ரோ கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,

Marisilcon X NPU என்ற Imaging processor  பயன்படுத்தப்படுகிறது இந்த ப்ராசசர் ஆனது oppo  நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாகும்

இதன் மூலமாகத் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவது மட்டுமின்றி இரவு  நேரங்களில் கூடத் தரமான புகைப்படங்களை வழங்கும் 

இந்த மூன்று கேமராக்களை பயன்படுத்தி ஆட்டோ ஃபோகஸ் மேனுவல் போக்கஸ் 10x டிஜிட்டல் ஜூம், HDR,50mp mode, AI Color portrait mode, Portrait mode, filters,  bokeh effect, போன்ற வகையான புகைப்படங்களைப் பதி விடுகின்றது

 வீடியோ என்று வருகையில் 4Kவில் HDR வீடியோக்களைப் பதிவிட இயலும் பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களில் கூட 4K அல்ட்ரா நைட் வீடியோவைபயன்படுத்தக்கூடிய வசதியினை கொண்டுள்ளது

ஸ்லோ மோஷன் வீடியோக்களை 960fps வரையிலான வீடியோவைப் பதி விடுகிறது, மேலும் Tripod mode, Ultra study mode இல் 1080p மற்றும் 4K வரையிலான வீடியோவைப்பதிவிட இயலும்,

Portrait இல் வீடியோவைப் பதிவிடும்பொழுது 1080p வரையிலான வீடியோக்களைப் பதிவிட இயலும்

கேமரா அமைப்புகளில் இத்தனை சிறப்பம்சங்களையும் கொண்டுள்ள Reno 8pro ஸ்மார்ட்போனில் முக்கிய பங்களிப்பாக Oppo நிறுவனத்தின் Imaging ப்ராசசர் ஆன,

Marisilcon X NPU மிகச்  சிறப்பான செயல் திறன் கொண்டு சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிப்படுத்துகின்றன,

Frond camera

32mp,f/2.4 லென்ஸை கொண்ட SONY IMX709  கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்தக் கேமராவை மற்ற ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமராவுடன்ஒப்பிடும்பொழுது

60 சதவிகித வெளிச்சத்தை உள்வாங்குகிறது இதனால் புகைப்படங்கள் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் வழங்குகிறது 

கேமரா அமைப்பில் ஆட்டோ ஃபோகஸ், பிக்ஸட் போகஸ், ஒரே சமயத்தில் முன்பக்கம் உள்ள கேமராவும் பின்பக்கம் உள்ள கேமராவும் செயல்படுத்துவது, எனப் பலவிதமான புகைப்படங்கள் வழங்குகிறது 

 வீடியோக்களில் 1080p இல் HDR Mode பயன்படுத்தி வீடியோக்களையும், போர்ட் ரைட் mode  இல் 1080p வீடியோவையும் பதிவிடுவது

இவை அனைத்தும் 30fps இல் மட்டுமே பதி விடுகிறது

Marisilicon X NPU இமேஜிங் ப்ராசசர் பயன்படுத்துவதால் Portrait வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன 

Battery

நீண்ட ஆயுளுடன் நீடித்து உழைக்கக்கூடிய Li-polymer கொண்ட 4500mah பேட்டரி இணை பெற்றுள்ளது இந்தப் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு super VOOC 80W சார்ஜரை பயன்படுத்தப்படுகிறது

இந்தச் சார்ஜரைபயன்படுத்தி 28 நிமிடங்களில் 100 சதவீத பேட்டரியை நிரப்பி விட இயலும் என OPPO தரப்பில் கூறப்படுகிறது

மேலும் பேட்டரியின் ஆயுளை நீடிக்கச் செய்வதற்கு OPPO தரப்பில் பேட்டரி ஹெல்த் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது

இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தாள்  நான்கு வருடங்களுக்குப் பேட்டரியின் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்ய இயலும் என OPPO தரப்பில் கூறப்படுகிறது 

AIR Guster

Oppo Reno 8pro ஸ்மார்ட் போனில் சிறந்த தொழில்நுட்பங்களில் இந்த AIR GUSTER ஒன்றாகும்  இந்த air guster மூலமாக ஃபேஸ்புக் யூடியுப் போன்ற சோசியல் மீடியாவை பயன்படுத்தும்பொழுது

கைகளை மேலே உயர்த்துவது மூலமாகவும் கீழே தாழ்த்துவது மூலமாகவும் (Scroll) மேலே நகர்த்துவது அல்லது கீழே நகர்த்துவது போன்ற செயல்பாட்டினை மேற்கொள்கிறது

வீடியோக்களைக் காணும்பொழுது வீடியோவை நிறுத்த வேண்டும் என்றால் டிஸ்ப்ளே வின் அருகே நிறுத்து என்பதை போன்று கைகளைக் காண்பிக்கும்போது வீடியோக்கள் தானாகவே நின்றுவிடுகின்றன.

இந்தச் சிறப்பம்சங்கள் பேஸ்புக் மற்றும் யூடியூப் இவை இரண்டில் மட்டுமே செயல்படுகிறது தற்போது மற்ற செயல்களுக்கு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Sim card

இரண்டு சிம் கார்டு அமைப்பு கொண்ட Reno 8pro  ஸ்மார்ட்போனில்  நினைவக அட்டையைப்பயன்படுத்தும் வசதியினை கொடுக்கப்படவில்லை

இந்த இரண்டு சிம் கார்டுகளில் ஒரே நேரத்தில் 4G,5G ஆதரவை வழங்கும் தன்மையை உடையது.

12 வகையான 5G Band மற்றும் WI-FI காலிங் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினையும் கொண்டுள்ளது

Storage

Ram நினைவகத்தில்LPDDR5 வகையும், உள் சேமிப்பு நினைவகத்தில் UFS3.1 வழங்கப்பட்டு 12 GB Ram+256 GB சேமிப்பு நினைவகம் என்ற ஒரே  வகையில் மட்டுமே கிடைக்கின்றன,

நினைவக அட்டை பயன்படுத்தும் வசதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Sound

ஸ்டீரியோ ஆடியோவை ஆதரிக்கும் வகையில் இரண்டு ஸ்பீக்கர் அமைப்புகள் கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்பீக்கர்கள் இலும் இருந்து வெளியிடக்கூடிய ஆடியோ மிகவும் சத்தமாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்துகின்றது,

3.5 mm ஆடியோ ஜாக் கொடுக்கப்படவில்லை ஆகையால் USB type-C வகை இயர் போன்களை மட்டுமே பயன்படுத்த இயலும், ப்ளூடூத்5.3 வழங்கப்பட்டுள்ளது ப்ளூடூத்   ஆடியோவையும் வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது 

oppo reno 8pro plus

 

Biometrics

ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் மற்றும் ஃபேஸ்   அண்லாக் வழங்கப்பட்டுள்ளது.45,999விலைக்கு ஏற்ற

அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ஆனால் ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது 

Sensors

Light sensor, proximity sensor, electronic compass, gyroscope sensor, accelerometer போன்ற அனைத்து வகையான சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளன 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *