best smart watches வரவு அதிகரித்துள்ளது,dizo watch,realme whatches,noice,zebronic போன்ற Smart watches, ஸ்மார்ட் வாட்ச்களில் எந்த ஸ்மார்ட்வாட்ச் சிறந்த செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன என்பதை பற்றிய முழு விவரங்களையும் விமர்சனங்களையும் முழுமையாக காணலாம்
அதற்கு முன்பு இந்த Smart watches உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் மருத்துவத் துறைக்கு பயன்படுத்த உகந்தது அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால்
ஸ்மார்ட் வாட்ச்களில் உள்ள இதயத்துடிப்பை கணக்கிடுவது, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிடுவது,ECG,போன்ற கணக்கிடும் அளவுகளை மருத்துவத்துறையில் காண்பித்து சிகிச்சை பெற்றுக் கொள்ள இயலாது
அதற்கு காரணம் அளவுகளை ஏற்றுக்கொள்ளப்பட இயலாதது, ஆகையால் நண்பர்களே இதில் காண்பி கூடிய அளவுகளை எக்காரணத்தைக் கொண்டும் மருத்துவத் துறைக்கு பயன்படுத்த வேண்டாம்
Dizo Watch R
சீனாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்கக்கூடிய Realme நிறுவனத்தின் துணை நிறுவனமான DIZO ஆடியோ தயாரிப்புகள்,Beard Trimners,Hire Dryers,Smart watches போன்ற சாதனங்களை தயாரித்து வெளியிடுகின்றன நாம் காணவிருப்பது Dizo Watch R ஸ்மார்ட் வாட்ச் பற்றிய முழு தகவல்களையும்,
Dizo Watch R சிறந்த ஸ்மார்ட் வாட்ச்தானா என்ற கேள்விகளுக்கும் Watch R ,Smart watches விலைக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் உள்ளதா என்பதைப் பற்றியும், என்ன விலைக்கு தற்போது இந்தியாவில் கிடைக்கின்றது என்பதைப் பற்றியும்,எந்த ஷாப்பில் வெப்சைட்டில் விலை மிக மலிவாக கிடைக்கிறது என்பதை பற்றியும், பேட்டரியின் ஆயுள் காலம், நாம் கொடுக்க கூடிய விலைக்கு நீடித்து உழைக்கும்மா?, இதுபோன்ற உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் முழு விமர்சனமாக காணலாம்
Display
1.3 இன்ஸ் கொண்ட சிறந்த AMOLED டிஸ்ப்ளே டிஸ்ப்ளேவை பெற்று உள்ளது,AMOLED டிஸ்ப்ளேவானது சிறந்த வண்ணங்களை பிரதிபலிக்கக் கூடியது அதுமட்டுமன்றி உயர் வேறுபாடு(highconrest) அளிக்கக் கூடிய தன்மை பெற்றுள்ளது,
குறைந்த அளவே பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதுடன் பேட்டரியின் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்கிறது
360×360 தொடு திரையில் தீர்மானத்தை பெற்று (392ppi) பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது
550nits பிரகாசம் கொண்டுள்ளது ஆகையால் சூரிய வெளிச்சம் நேரடியாக படுகின்ற இடங்களில்கூட மிகச் சிறப்பாகவே இந்த Dizo Watch R செயல்படுகிறது, 2.5D பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்த டிஸ்ப்ளேவில்( ஆண்டி பிங்கர் பிரிண்ட் கோட்டிங்) கைரேகை எதிர்ப்புத் திறன் கொண்ட பூச்சு அமைப்பை பெற்றுள்ளது ஆகையால் தொடுதிரையினைக் பயன்படுத்தும்போது கைரேகைகள் படிவது மிகக் குறைவாகவே இருக்கின்றன.
150+watch face கொடுக்கப்பட்டுள்ளது, டிஸ்ப்ளேகளில்மிகச்சிறந்த எது என்றால் அது AMOLED டிஸ்ப்ளே தான், AMOLED டிஸ்ப்ளே என்பதனால்(Always on disply) என்ற சிறப்பம்சமும் பெற்றுள்ளது இந்த சிறப்பம்சம் மூலமாக நேரத்தையும் தேதியும் எப்பொழுதும் கண்காட்சி அழித்தவரே இருக்கின்றன
Designing
Dizo watch-R ஆனது ஒரு வட்ட வடிவமான அமைப்பை பெற்றுள்ளது, இந்த smart watches பக்கவாட்டில் எஃகு (steel) உடல் அமைப்பை பெற்றுள்ளது,
பின் பகுதியில் பிளாஸ்டிக் உடலமைப்பை பெற்றிருந்தாலும் கண்ணாடி உடலமைப்பை போன்றே காட்சி அளிக்கின்றன
260.6 mmசுற்று வட்டத்தையும்,144.73 mm அகலத்தையும்,11.70 mm தடிமன் கொண்டது,இதன் மொத்த எடை ஆனது 45g மட்டுமே கொண்டுள்ளது
இதன் பட்டா பொருளானது (strap meterial)பாலிகார்பனேட் கொண்டு உருவாக்கபட்டது ஆகையால் உறுதியான உழைப்பை உறுதிப்படுத்துகின்றது
இந்த பட்டா(strap meterial) மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன,கருப்பு சில்வர் தங்க இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன
Battery
நீடித்து உழைக்கக்கூடிய 280,ah பேட்டரி திறனை பெற்றுள்ளது இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்வதற்கு 2 மணிநேரங்கள் எடுத்துக் கொள்கின்றன.ஒரு முறை தாஜ் செய்வதன் மூலமாக 12 நாட்கள் முழுமையாக நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் நீண்ட ஆயுளையும் கொண்ட பேட்டரி அமைப்பை பெற்றுள்ளது
Connectivity
ப்ளூடூத் V 5.0 கொண்ட Dizo watch-R ஆனது உங்கள் ஸ்மார்ட் போனில் இணைந்த பின்பு மியூசிக் கண்ட்ரோல், கேமரா ஷட்டர் பட்டன் செயல்படுவது, பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது வால்யூம் அதிகரிப்பது
மற்றும் குறைப்பது,அடுத்த பாடலை தேர்வு செய்வது முடிந்த பாடலை மீண்டும் செயல்படுத்துவது என அனைத்தையும் இயக்குவதற்கு உதவுகிறது,இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஆண்ட்ராய்டில் V4.5 முதல் ஆதரவை வழங்குகிறது
ப்ளூடூத் வழியாக இணைக்கப் பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன்களில் வரக்கூடிய அழைப்புகளை இந்த smart watches மூலமாக காணலாம்
அதுமட்டுமின்றி அழைப்புகளை தவிர்ப்பது மற்றும்அழைப்புகளை முடக்குவது (Mute) போன்ற செயல்பாட்டினை இந்த ப்ளூடூத் வழியாக செயல்படுத்த இயலும்
Sensor
Accelerometer சென்சார் கொடுக்கப்பட்டுள்ளதால் கைகளை உயர்த்தும் போது Display on ஆகி விடுகிறது. Display வை (OFF) நிறுத்துவதற்கு Power பட்டனை அழுத்துவதன் மூலமாகவும் திரையை (OFF)நிறுத்தலாம் அல்லது டிஸ்ப்ளே மீது கைகளை வைத்து மறைப்பதன் மூலமாகவும் டிஸ்பிலே வை (OFF)நிறுத்தலாம்
Helth
24 மணி நேரமும் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொண்டே இருக்கும் .இந்த 24 மணி நேரமும்,இதயத்துடிப்பு,ஆக்சிஜன் அளவு (SPO2),தூக்கம் ,நீர் அருந்தும் நேரம்,அமர்ந்து வேலை செய்பவர்களை குறிப்பிட்ட நேரத்தில் நடக்க சொல்லி நினைவூட்டுகிறது ,பெண்களுக்கான ஆரோக்கியத்தை கண்காணித்தல்.நடப்பது (Step counting) கணக்கிடுதல்,எத்தனை மணி நேரம் தூக்கத்தில் இருக்கிறீர்கள் என்ற கண்காணிக்கின்றன.இதுமட்டுமன்றி விளையாட்டு வீரர்களுக்காக 110+ வகையான விளையாட்டு முறைகளை பெற்றுள்ளது.
கண்காணிக்கப்பட்டது தகவல் அனைத்தையும் உங்கள் ஸ்மார்ட்போனில் Dizo செயலினை பதிவிறக்கம் செய்வதன் மூலமாக அனைத்து தகவல்களை உங்கள் ஸ்மார்ட் போனில் காணலாம்.
More spec
மியூசிக் கண்ட்ரோல்,Camera கண்ட்ரோல்,Relect calls,mute calls,smart notification.நீர் மற்றும் தூசி புகா தன்மைக்கான 5 ATM சான்றிதழ் பெற்றுள்ளது.ஆகையால் 50meter கொண்டு சென்றாலும் நீர் புகாது என Dizoகூறப்படுகிறது.விலை 3799 என்ற விலையில் Flipkard மட்டும் கிடைக்கின்றன
Amazfit Bip U pro
1.43inch கொண்ட IPS LCD (TFT) டிஸ்ப்ளேவினை பெற்று 302×320பிக்சல் அடர் திணை கொண்ட டிஸ்ப்ளேவாகும் 2.5D வளைந்த டிஸ்ப்ளேவை பயன்படுத்தப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி தொடுதிரை பயன்படுத்தும் பொழுது கைரேகை எதிர்ப்பு திறனை கொண்ட பூச்சு அமைப்பை பெற்றுள்ளது.308 (PPI) பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது.AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Designing
செவ்வக வடிவமைப்பை பெற்றுள்ள Bib u pro ஆனது பாலி கார்பன் உடல் அமைப்பைப் பெற்றதாகவும்.40.9 mm நீளத்தையும் 36.3 mmஅகலமும்,11.4 mm தடிமனை பெற்று 31g எடையை மட்டுகொண்டுள்ளது
Battery
நீடித்து உழைக்கக்கூடிய 230mah li-po பேட்டரி பெற்றுள்ளது இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்வதற்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.ஒரு முறை சார் செய்வதன் மூலம் சாதாரணமாக பயன்படுத்தும் பொழுது 9 நாட்கள் வரை நீடிக்கிறது ,GPS,Notificationஅதிகமாக பயன்படுத்தும் பொழுது 4 நாட்கள் மட்டுமே நீடித்து உழைக்கிறது
Connectivity
ப்ளூடூத் 5.0 கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக Music control செய்வது, Mobile கேமராவின்Shatter பட்டனாக பயன்படுத்துவது எனபலவிதமான பயன்களை கொண்டுள்ளது.
Sensor
Bio tracker,2ppg Biological optical sensor acceleration sensor, Geomagnetic sensor போன்ற சென்சார்களை பெற்றுள்ளது
Map
GPU சிறப்பு அம்சம் கொண்டுள்ளது இதன் மூலமா நீங்கள் செல்லக்கூடிய இடங்களை துல்லியமாக காண இயலும். இதற்கு உங்கள் ஸ்மார்ட் போனில் இதற்கென்றே Zepp app பிரத்தியேக செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
இதன் மூலமாக நீங்கள் செல்லக்கூடிய இடங்களை முழுமையாக காணலாம்.GPS செயல்படுத்துவதற்கு உங்கள் ஸ்மார்ட் போனில் ப்ளூடூத் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Supportable devices
ஆண்ட்ராய்டில் 5.0 முதல் ஆண்ட்ராய்டில் IOS இல் 10.0 அதற்கு மேலுள்ள IOS லும் ஆதரிக்கிறது இந்த இரு சாதனத்திற்கு தனித்தனி செயலிகள் உள்ளன ஆண்ட்ராய்டில் Play storel லும் I phonel இல் istor லும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Helth
இதயத்துடிப்பை கண்காணித்தல், படி எண்ணுதல் (Steps counting),Ciories burned கண்காணித்தல், அளவைக் கண்காணித்தல், தூங்கும் நேரத்தை கண்காணித்தல், அலாரம் நினைவு ஓட்டுதல் Find my phoneஅழைப்புகளை மேற்கொள்வது,
Music control.வாட்ஸ்அப் செய்திகளை காண்பது, போன்ற பலவிதமான செயல்பாட்டினை செய்கிறது.Bpகண்காணித்தல் Ecg போன்ற சிறப்பம்சங்கள் கொடுக்கப்படவில்லை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Alexa
Input mic கொண்டுள்ளAmaz bib u pro ஸ்மார்ட் வாட்ச் உடன் “அலெக்சா”கொடுக்கப்பட்டுள்ளன. நாம் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதில் அளிக்கிறது.Speaker அணைப்பு கொடுக்கப்படவில்லை. ஆகையால்தான்அலெக்சா எழுத்து வடிவிலான பதில்களை வழங்குகிறது. கிட்டத்தட்ட ஆப்பிள் வாட்ச் போன்ற காட்சி அளிக்கிறது.
Realme Watch-S
Realme watch-s இல் Amoled டிஸ்ப்ளே கொடுத்திருக்கலாம் ஆனால் 1.3 Inch கொண்ட IPS lcd டிஸ்பிலே வை பெற்றுள்ளது இருப்பினும் டிஸ்ப்ளேவில் குறை ஒன்றும் இல்லை 360×360 கொண்டுள்ளது,392 (ppi)(pixel per inch) பிக்சல் அடர்திணை கொண்டுள்ளதால் துல்லியமான காட்சி வெளிப்படுத்துகின்றன,
இந்த கட்டுரையில் கண்ட ஸ்மார்ட் வாட்ச்களில் இல்லாத இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன அவை டிஸ்ப்ளேவின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் எந்த வகை சார்ந்துள்ளன சார்ந்துள்ளன குறிப்பிடவில்லை மற்றொன்று ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆட்டோ பிரைட்னஸ் போன்றே இந்த Realme watch-s இல் கொடுக்கப்பட்டுள்ளன, இதனால் மேலும் சிறப்பம்சங்களை கூடுதலாகிறது TFT டிஸ்ப்ளேகளிலே இது சிறந்த டிஸ்ப்ளே ஆகும்.
Designing
வட்டவடிவ அமைப்பை கொண்ட Realme watch-s ஆனது47.0mm அகலத்தையும் 259 mm சுற்றுவட்ட அளவையும்,12 mm தடிமனையும் கொண்டது. இந்த சாதனத்தின் எடை 48g ஆகும். இதன் உடல் அமைப்பானது அலுமினியத்தால் ஆனது
பட்டா(Strap) ஆனது சிறந்த சிலிகான இல் உருவாக்கப்பட்டது கருப்பு மற்றும் சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு-5.0 முதல் அதற்கு மேல் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு 5.0களிலும் இணைத்துக்கொள்ள ஏதுவான தாகும் Iphone கலில் பயன்படுத்துவதற்கும் ஏதுவானதாக இந்தRealme watch-s ற்குஎன்றே பிரதியாககத்தியாக செயலி Play store மற்றும் IStore இல் உள்ளது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்
Sensor
3-axis Acceierometer, இதயத்துடிப்பு கண்காணிப்பாளர்(SP02)ஆக்சிசன் கண்காணிப்பார் போன்ற சென்சார்களை இடம் பெற்றுள்ளன.
இதயத்துடிப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கிறது ரத்தத்தில் உள்ள ஆக்சிசன் அளவையும் 24 மணி நேரமும் கண்காணிக்கிறது
Notificatio
Watsapp,Facebook,instagrame,telegrame,twiter messegeஇதுபோன்ற அனைத்து வகையான Notification இந்த Realme smart watch-s இல் காணலாம்.
Sports mode
Outdoor run, outdoor cycle, walk aerobic capacity, cricket, indoor cycle, Table tennis stationary, bike, indoor run Elliptical, badminton, strength Training yoga என
16 வகையான sports mode இடம்பெற்றுள்ளன. மற்ற smart watch உடன் ஒப்பிடும்போது sports modeமிக குறைவு
Battery
15 நாட்கள் நீடித்து உழைக்கக்கூடிய Ii-lon 390mah பேட்டரி திறனை கொண்டுள்ளதால் நீண்ட ஆயுள் கொண்டபேட்டரி திகழ்கிறது. இந்த390mah பேட்டரியை நிரப்புவதற்கு 2 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.
More future
100+ Watch face உள்ள இதனை பயன்படுத்த Realme செயலின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், Stopwatch, message reminder, shake Adjustment, walk screen, drink water Reminder, find your phone sleep monitor, meditation.
Ip68 water resistant சான்றிதழ் கொண்டிருப்பதால் 1.5 meter வரையிலான (சுத்தமான தண்ணீர்) பயன்படுத்தும் பொழுது நீர்புகா தன்மையை கொண்டுள்ளது.Blutooth 5.0 கொண்டுள்ளது இதன் மூலமாக இணைத்துக்கொள்ளலாம்.
Blutooth வழியாக Music control செய்வது ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவிற்கு shatter buttan ஆக பயன்படுத்த உதவுகிறது. GPS, Wlan, ECG, BP Monitor, இதுபோன்ற பல சிறப்பம்சங்கள் இந்த Realme watch-s இல் கொடுக்கப்படவில்லை என்பதே வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.
Zebronics Zeb-fit 4220 CH
Display
1.3inch கொண்ட TFT டிஸ்ப்ளே கொண்ட zebronic zeb -fit 4220 ch smart watches ஆனது வட்டவடிவ அமைப்பை கொண்டதாகும். 47 mm சுற்று வட்டத்தையும்,22 mm அகலத்தையும் 12 mm தடிமனையும்பெற்றுள்ளது.
TFT டிஸ்ப்ளேவிற்கு பதிலாக AMOLED டிஸ்ப்ளே கொடுத்திருக்கலாம் ஆனால் விலைக்கு ஏற்றவாறு அதன் சிறப்பம்சங்கள் இருக்கும். அமேசான் வலைதளத்தில் ,2,799விலையில் பிளிப்கார்ட்டில் வலைதளத்தில் 3,999என்ற விலையில் கிடைக்கின்றன.
Zebronic வலைதளத்தில் வாங்க வேண்டாம் காரணம் அதன் விலை தான் ,7,999என்ற விலைக்கு விற்பனை ஆகிறது. 7,999அதிகமாகவே உள்ளது ஆனால் அமேசானில் விலை குறைவாக உள்ளது. அப்படி என்ன சிறப்பம்சங்கள் அம்சம் உள்ளது இந்த zeb-fit 4220ch smart வாட்சில் முழு விமர்சனத்தையும் காணலாம்
Calling
ப்ளூடூத் 5.0 கொண்டு கொண்டுள்ளது இந்த வழியாக உள்ள இணையத்தின் மூலமாக உங்கள் ஸ்மார்ட் போன் வரக்கூடிய அழைப்புகள் இந்த Zeb -fit 4220 ch ஸ்மார்ட் வாட்ச் அழைப்புகள் மேற்கொள்ளலாம்.
அழைப்புகள் மேற்கொள்வதற்கு இந்த ஸ்மார்ட் வாட்ச் உடன் Speaker மற்றும் Mic அமைப்பை பெற்றுள்ளது ஆகையால் எளிதாக Smart watches மூலமாக தொடர்பு எண்கள் மூலமாகவும்,Dail pad வழியாகவும் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
ப்ளூடூத் வழியாக அழைப்புகளை மேற்கொள்வது மட்டுமின்றி ஸ்மார்ட்போனில் வழியாக பாடல்கள் கேட்கலாம் அடுத்த பாடல் தேர்வு செய்வது முடித்த பாடலை மீண்டும் கேட்பது போன்ற
அனைத்தையும் செயல்படுத்த இயலும். கேமராவில் உள்ள கேமராவை இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக Sumart butten போல பயன்படும்
Battery
நீடித்து உழைக்கக்கூடிய 220 Mah பேட்டரிகளை பெற்றுள்ளது. எந்த பேட்டரியினை முழு சார்ஜ் செய்வதற்கு இரண்டு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன
Sports mode
பிளட் பிரஷர், இதயத்துடிப்பு கண்காணிப்பார்,SPO2,ஆக்சன் கணக்கிடுதல், படி கணக்கிடுதல், தூங்கும் நேரத்தை கணக்கிடுதல், என ஏழு வகையான ஸ்போர்ட்ஸ் மாடல் உள்ளன
மற்ற Smart watchesஉடன் ஒப்பிடும் பொழுது மிகக்குறைவான ஸ்போர்ட்ஸ் mods உள்ளன
இந்த smart whatches ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் IOS களிலும் செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது, ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் ஆப்பிள் istore லும் ZEB FIT20 series செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள இயலும்
More specs
100+watch face,பிரத்யேக செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,IP67 சான்றிதழ் பெற்றுள்ளதால் தூசு மற்றும் நீர் புகார் தன்மையை கொண்டுள்ளது
அலாரம் க்ளாக், ரிமைண்டர். மியூசிக் கண்ட்ரோல் ரிமோட் கேமரா ஷட்டர், என பலவித செயல்பாட்டினை மேற்கொள்ள இயலும்