Realme 9pro or 9pro plus,6.4 inch (16.26 cm), AMOLED, ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சர்,9hz,4500mah, டைமன் சைட் 900,50+8+2mp,16mpசெல்பி கேமரா,
Realme 9pro,IPS, LCD, full HD+,120hz,குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695,5G,64+8+2mp,16mpசெல்பி கேமரா,5000mah போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள்
ரியல் மீ நிறுவனம் இந்த மாதத்தில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரியல்மீ 9 ப்ரோ மற்றும் ரியல் மி 9 புரோ பிளஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை களமிறக்கியுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் உள்ள வேறுபாடுகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் நிறை குறைகள் போன்றவற்றை முழுமையான விமர்சனங்களுடன் காணலாம்
Realme 9pro plus
Display
ரியல் மீ 9pro plus பற்றி முதலில் காணலாம் இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் கொண்ட சூப்பர்AMOLED பெற்று இருப்பதால் ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் கொடுக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
இந்த டிஸ்ப்ளே ஃபுல் ஹெச்டி பிளஸ் (2400×1080) கொண்டு 90Hz திரையின் புதுப்பிப்பு தன்மையைக் கொண்டுள்ளது இத்துடன் 360Hz திரையின் தொடுதல் மாதிரி விகிதம் பெற்றிருப்பதால் டிஸ்ப்ளேவில் பயன்படுத்தும்போது சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கின்றது,
இந்த டிஸ்ப்ளே பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, இந்த டிஸ்பிளே பிரைட்னஸ் பொருத்தவரை 800 nits மட்டுமே கொடுத்திருப்பது சற்று வருந்தத் தக்க ஒன்றாகும்
ஏனென்றால் இதற்கு முன்பு வெளிவந்த ரியல் மீ 8 புரோ ஸ்மார்ட்போனில் 1000nits கொடுக்கப்பட்டிருந்தது ஆனால் இந்த ரியல் மி 9 புரோ ப்ளஸ்ஸில் டிஸ்பிளே பிரைட்னஸ் ஐ குறித்திருப்பது வருந்தத் தக்க ஒன்றாகும்
Designing
ரியல் மி 9 புரோ பிளஸில் டிஸ்ப்ளேவில் மேல் பகுதியிலிருந்து வலது வலது பக்க மூளையில் panch hole கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் மேலும் சிறப்பம்சம் என்று கூறுகையில் இதில் கொடுக்கப்பட்டுள்ள
இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரில் ஒரு சிறப்பு உண்டு இந்த இன் டிஸ்பிளே பிங்சர்ப்ரின்ட் சென்சர் இன் மூலமாக உங்களது இதயத்துடிப்பை கணிக்க இயலும், கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால்
இதில் காட்டக்கூடிய அளவுகள் மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்கு சரியானது அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்
Bettary
ரியல் மீ 9 ப்ரோ ப்ளஸ்ஸில் 4500Mah பேட்டரி திறன் கொண்டிருக்கிறது இந்தப் பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 65 வாட்ஸ் சார்ஜர் கொடுக்கப்படுகிறது இந்தச் சார்ஜரை பயன்படுத்தி 15நிமிடங்களில் 50%பேட்டரியை நிரப்பி விடுகிறது என்று ரியல்மி தரப்பில் கூறப்படுகிறது,
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இந்த ஸ்மார்ட் போனுடன் 65w சார்ஜர் கொடுக்கப்படுகிறது ஆனால் இந்த ஸ்மார்ட்போன் 60w வரை மட்டுமே ஆதரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Oprating system
ஆண்ட்ராய்டு 12 ரியல் மீ UI 3.0 கொண்டு இயங்குகிறது,
Cooling technologe
இந்த ஸ்மார்ட் போனுடன் Vapour chamber cooling Technology system கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனில் வெப்பம் அதிகரிக்கும்போது தானாகவே வெப்பத்தை தனித்து கொள்ளும் தன்மை பெற்றுள்ளது
Processor
பிராசசர் பொருத்தவரை மீடியாடெக் டைமண்ட் சைட் 920 5G பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தப் பிராசசர் டைமண்ட் சைட் 900 விட CPU வில் 9% வரையிலும், GPU வில் 35% வரையிலும் அதிகத் திறனுடன் செயல்படுகிறது.
இந்தப் பிராசசர் 5G ஆதரவைப் பெற்று உள்ளதால் 13 வகையான 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது.
இந்தப் பிராசசர் 6nm கொண்டு உருவாக்கப்பட்டதால் செயல்திறன் சிறப்பாக இருக்கின்றது பேட்டரியின் சக்தியைக் குறைவாகவே செலவிடுகிறது
6nm கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பிராசஸர் ஆக்டாகோர் 2.5Ghz வரை செயல்படும்,GPU பொருத்தவரை arm mali-G68 mc-4 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது .
Storage
UFS 2.2 வகையைச் சார்ந்த உள்ளடக்க நினைவகத்தை பெற்று 6GB/8GB ram,128/256GB போன்ற வகைகளில் கிடைக்கின்றன
Rear camera
Realme 9pro plus ஸ்மார்ட்போனில் 50mp f/1.8 முதன்மை கேமராவை பயன்படுத்தி உள்ளது இந்தக் கேமரா சோனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட IMX 766 என்ற வகையைச் சார்ந்தது,
இந்தக் கேமராவில் OIS மற்றும்EIS கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றது அதேபோல்
வீடியோக்களைப்பதிவிடும்பொழுது நடுக்கமற்ற வீடியோக்களை இந்த OIS மற்றும் EIS மூலமாகத் தரமான வீடியோக்களைப் பதிவிட இயலும்
இரண்டாவது கேமராவாக 8mp f/2.2 அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்டு119 டிகிரி வரை அகண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட இயலும். மூன்றாவது கேமராவாக 2mp f/2.4 லென்ஸ் கொண்டு மேக்ரோ புகைப்படங்களை எடுக்க உதவுகிறது
இந்தக் கேமராக்களை பயன்படுத்தி Ultra study video, time lamp, portrait mode, HDR ultrawide, Ultra macro, AI beauty, Chrome boost slow motion, bokeh effect control live HDR, night mode photo, night mode video, AI hight video, எனப் பலவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிட இயலும்
Frond camera
முன்பக்கமாக உள்ள கேமராவில் 16mp f/2.4 உடன் 78 டிகிரி அகன்ற புகைப்படங்களை மற்றும் வீடியோக்களைப் பதிவிட இயலும்
மேலும் இதன் இணைப்புகளைப் பொறுத்தவரை wi-fi 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஸ்பீக்கர், ப்ளூடூத் ஆடியோ கோடெக், TWS+,3.5 mm audio போன்ற சிறப்பம்சங்களைப் பெற்று இருக்கிறது
PROS & CONS
இதுவரை ரீல்மே 9 புரோ பிளஸ் ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் கண்டோம் இதன் குறைகள் என்று காணும்பொழுது,
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த இயலும் நினைவக அட்டை பயன்படுத்த இயலாது,
அடுத்தது டிஸ்ப்ளேவில் பிரைட்னஸ் அளவு 800nits மட்டுமே கொடுத்திருப்பது, இந்த ஸ்மார்ட்போனில் வலது பக்கத்தில் பவர் பட்டன்
இடது பக்கத்தில் வால்யும் பட்டன் கொடுப்பதற்கு பதிலாக வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன் கொடுத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்துக்கள் ,
இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்கும்பொழுது சில நேரங்களில் கலர்ஸ் கூடுதலாகவும் சில நேரங்களில் மங்கலான புகைப்படங்களை வெளியிடுகிறது இந்தப் பிரச்சினை எப்போதும் இருப்பதில்லை சில நேரங்களில் சந்திக்க நேரிடுகிறது
Realme 9pro
Display
ரியல் மீ 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.6 inch கொண்ட IPS LCD டிஸ்ப்ளே உடன் (2412x1080p) பிக்சல் ரேசொலியேசன் 120 Hz திரையின் புதுப்பிப்பு தன்மையைக் கொண்டுள்ளது, (400ppi) densityபிக்சல் அடர்தீயினை கொண்டுள்ளது. திரையின் மேல்பகுதியில் மையப்பகுதியில் panch hole கேமராவை பெற்று வருகிறது
Oprating system
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 உடன் realme UI 3.0 ஆண்ட்ராய்ட் அப்டேட்டி பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை கொண்டு இயங்கும்
Processor
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 கொண்டு இயங்குகிறது இந்தப் பிராசசர் 6nm கொண்டு உருவாக்கப்பட்டது, இந்தப் பிராசசர்ரில் 5G ஆதரவு கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ரியல் மீ 9 ப்ரோ ஒரு ஆக்டாகோர் kryo 660 gold, kryo 660 silver கொண்ட CPC பயன்படுத்தபடுகிறது.GPU பொருத்தவரை adreno 619 பெற்று செயல்படுகிறது
Storage
நினைவகத்தை பொருத்தவரை UFS 2.2 வகையைச் சார்ந்த உள் நினைவகத்தை பெற்று 6GB/128,8GB/128GBஎன்ற வகைகளில் கிடைக்கின்றன
இந்த ஸ்மார்ட் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்த இயலும் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகளிலும் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கும்.
ஆனால் நினைவகத்தை அதிகரித்துக்கொள்ள ஒரு சிம்கார்டு ஒரு நினைவக அட்டை என்று பயன்படுத்த இயலும் இரண்டு சிம்கார்டுகள் ஒரு நினைவக அட்டையென ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இயலாது
Rear camera
64mp f/1.8 லென்ஸ் கொண்ட முதன்மை கேமராவும் இரண்டாவதாக 8mp f/2.2 அல்ட்ரா வைட் கேமரா மூலமாக 119 டிகிரி வரை புகைப்படங்களைப் பதிவிட இயலும் மூன்றாவதாக உள்ள கேமரா 2mp f/2.4 கொண்ட கேமராவை பெற்றுள்ளது
Frond camera
முன்பக்கமாகச் செல்பி கேமராவிற்கு 16mp f/2.1 லென்ஸ் கொண்ட செல்பி கேமரா பெற்றுள்ளது.
Battery
பேட்டரி திறனைப் பொருத்தவரை 5000Mah பெற்ற இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் சார்ஜர் உடன் வருகிறது இதில் சார்ஜ் செய்யும்பொழுது ஒரு மணி நேரத்தில் முழுவதுமாகச் சார்ஜ் செய்து விடுகிறது
more future
இணைப்புகள் பொருத்தவரை வைபை, ப்ளூடூத் ஜிபிஎஸ், காம்பஸ் மேலும் பல சிறப்புகளைப் பெற்றது இந்த ஸ்மார்ட்போன் களமிறங்குகிறது
ஸ்மார்ட் போன்களில் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ரியல் மீ 9pro plus ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை 6gb/128gb,24,999 என்ற விலைகளில் கிடைக்கின்றன.
ரியல் மி 9 புரோ ஸ்மார்ட்போனில் விலை 17,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கின்றனஇதில் நாம் கொடுக்கக்கூடிய பண மதிப்பிற்கு ரியல் மி 9 புரோ பிளஸ் சரியான தேர்வாக இருக்கும் அதே நேரத்தில் ரியல் மீ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகம் என்று கூறலாம்
குறைந்த சிறப்பம்சங்களைக் கொண்ட கேமராக்கள் என மேலும் பல குறைகள் உள்ளன ஆகையால் ரியல் மி 9 புரோ ஸ்மார்ட் போன் விலை சற்று விலை குறையும் தருவாயில் வாங்குவது மிக நன்று