s21 fe v/s iphone 12 ஸ்மார்ட்போன்கள் ஒரே விலையில் இரண்டு ஸ்மார்ட் போன்கள் இருப்பின் ஸ்மார்ட் போன் தேர்வு செய்வது என்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும்.நான் எந்தஎந்த ஸ்மார்ட் போன் நிறுவனங்களைப் பற்றிக் கூற போகிறேன் என்பதை நீங்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.
samsung galaxy S21 FE இந்த ஸ்மார்ட் போனுக்கு போட்டியாகக் களத்தில் உள்ள IPHONE 12 இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையும் ஏறத்தாழ ஒத்துப்போகும்.இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் எதைத் தேர்வு செய்வது, உங்களின் பயன்பாட்டிற்கு எந்த ஸ்மார்ட்போன் தேர்வு செய்வது என்பது பற்றி முழுமையாகக் காணலாம்
Samsung S21 FE
Display
Samsung S21 FE 6.4 இன்ச் கண்ட ஃபுல் ஹெச்டி பிளஸ் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே உடன் (2340x1080p) பிக்சல் ரேசொலியேசன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு தன்மையைக் கொண்டுள்ளது, 240 Hz (tach sampling rat)தொடுதல் மாதிரி விகிதம் கொண்டிருப்பதால் பயன்படுத்துவதற்கு மென்மையான அனுபவத்தைக் கொடுக்கிறது
Optical fingerprint sensor இந்த டிஸ்ப்ளேவில் இன்னும் சிறப்பான ஒன்றாகும்
கேமராவை பொருத்தவரை பின்பக்கமாக 12mp f/1.8, ultra-wide கேமராவிற்கு 12mp f/2.2, 123 டிகிரி வரை செல்லும், டெல போட்டோ கேமராவிற்கு 8mp,f/2.4, முன்பக்க கேமரா
முன்பக்க கேமராவிற்கு 32mp f/2.2 கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்
4500mah பேட்டரி திறனுடன் 25w ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டுள்ளது,15w வயர்லெஸ் சார்ஜிங் ஆதர உள்ள நிலையில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ளவும் இயலும்
இந்த ஸ்மார்ட்போன் பின்பக்கமாகப் பிளாஸ்டிக் பொருளைக் கொண்டது, பக்கவாட்டில் மட்டும் அலுமினியம் கொண்டது
Samsung one UI உடன் ஆண்ட்ராய்டு 12 இயங்குகிறது இதர இணைப்புகளைப் பொறுத்தவரை, 5G,4G,LTE, wi-fi 6,bluetooth v5.0 போன்ற இனிப்புகளைக் கொண்டது
IP68 சான்றிதழ் பெற்று இருப்பதால் நீர் புகா தன்மையை கொண்டுள்ளது
இதன் ஆரம்ப விலை 54.999என நிர்ணயம் செய்த சாம்சங் நிறுவனம் தற்போது அறிமுகக் சலுகை விலையாக 49.999 என்ற விலையில் கிடைக்கின்றன
Apple IPHONE 12
ஆப்பிள் ஐபோன் 12 பொருத்தவரை 6.1 inch Retina XDR OLED டிஸ்ப்ளே உடன் (2532x1170p)பிக்சல் ரேசொலியேசன்கொண்டு 60Hz refresh rate, HDR10, Dolby, Ceramic shield பின்பக்கமாகக் கொண்டுள்ளது, 164g எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்,
பின்பக்கமாக 12mp ப்ரைமரி கேமராவும் f/1.6 லென்ஸ் கொண்டு அல்ட்ரா வைட் கேமராவிற்கு 12mp f/2.4 உடன் 120 டிகிரி வரை வைட் போட்டோ எடுக்க உதவுகிறது முன்பக்க கேமராவை பொருத்த வரை 12mp f/2.2 செல்பி எடுப்பதற்கு பயன்படுத்தபடுகிறது
இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் எதுவும் கிடையாது அதற்குப் பதிலாக ஆப்பிள் பேஸ் ஐ டி ஐ பயன்படுத்துகிறது IP68சான்றிதழ் இருப்பதால் நீர் புகாத் தன்மை உடையது
இந்த ஸ்மார்ட்போனில் 2,815 Mah பேட்டரி திறன் கொண்டு 20w வரை பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆதரிக்கிறது,7.5wவயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கிறது
இதன் கனெக்டிவிட்டி பொருத்தவரை wi-fi 6,5G,4G, LTE, BLUETOOTH V5.0,ultra-wide band (UWB).பின்பக்கமாகக் கிளாஸ் பேக் கொண்டு,
பக்கவாட்டில் அலுமினிய பிரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கைகளில் பிடித்துப் பயன்படுத்துவதற்கு ஒரு பிரீமியம் அனுபவத்தைக் கொடுக்கிறது
ஆப்பிள் ஐபோன் 12 கருப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை, நீளம் ஆகிய வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன
இந்த ஸ்மார்ட்போன் 3 வகையில் கிடைக்கின்றன 4G RAM 64GB ROM,4GB RAM 128GB ROM,4GBRAM 256GB ROM என்ற வகையில் கிடைக்கின்றன.
Build and Designing
சாம்சங் கேலக்ஸி எஸ்21 FE மற்றும் ஐபோன் 12 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது
சாம்சங் S21 FE பின்பக்கமாகப் பிளாஸ்டிக் உடல் அமைப்பைக் கொண்டது ஆனால் ஐபோன் 12 இல் கண்ணாடியைக் வடிவமைப்புக் பெற்றுள்ளது
ஆகையால் ஐபோன் 12 மற்றும் சாம்சங் S21FE கையில் பிடிக்கும்பொழுது சாம்சங் ஸ்மார்ட் போனை விட ஐபோன் 12 ஒரு பிரீமியம் அனுபவத்தைக் கொடுக்கும்
ஆனால் ஐபோன் 12 கண்ணாடி உடல் அமைப்பு கொண்ட காரணமாகக் கையில் பிடிக்கும்பொழுது கைகளிலிருந்து நழுவிச் செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
Iphone 12 இல் கண்ணாடி உடலமைப்பு கொண்டதால் பின்பக்கமாகக் கை ரேகைகளின் அடையாளங்கள் நன்றாகத் தெரிகின்றன அதுமட்டுமின்றி கைகளிலிருந்து கீழே தவறும்பட்சத்தில் கண்ணாடி உடல் அமைப்பு என்பதால் சிதைவு அடைய அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால் சாம்சங் s21 ஃபேன் எடிசனின் பிளாஸ்டிக் உடலமைப்பு இருப்பதால் கைரேகைகள் சற்று குறைவாகவே இருக்கும்
அதுமட்டுமின்றி கைகளிலிருந்து தவறும்பட்சத்தில் பின்பக்கமாக உள்ள பிளாஸ்டிக் உடலமைப்பு சிதைவு அடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன,
இந்த இரண்டு ஸ்மார்ட் போன்கள் உங்களது தேவைக்கு ஏற்றார் போல் எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்துகொள்ளலாம்
Display
Samsung Galaxy S21 FE டிஸ்ப்ளேவில் சிறு துளை கொண்டு கேமராவை உள்ளடக்கியது அதே சமயத்தில் IPHONE 12 டிஸ்ப்ளேவில் (notch) கொண்டு கேமரா மற்றும் பேஸ்புக் ஐடி கொண்டுள்ளது
இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது வீடியோக்கள் காண்பதும் மற்றும் கேமிங் விளையாடும் போதும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கின்றன
ஐபோன் 12 இல் உள்ள(NOCH) வீடியோக்கள் மற்றும் கேம் விளையாடும்போது திரையை மறைப்பது போன்ற எந்த ஒரு தடைகளும் இல்லாமல் காணலாம்
சாம்சங் ஃபேன் எடிஷன் s21 டிஸ்ப்ளேவில் ஒரு துளை கேமரா இருப்பதால் திரையில் எந்தத் தடங்களும் இல்லாததுபோல் காட்சியளிக்கின்றன
IPHONE 12 ஸ்மார்ட் போன்,6.1 inchகொண்ட திரை மட்டுமே கொண்டது ஆனால் சாம்சங் கேலக்ஸி s21 FE இல் 6.4 inch கொண்டிருப்பதால் ஐபோன் 12 காட்டிலும் சற்று பெரிய திரையைக் கொண்டதுகேலக்ஸி எஸ் 21எஃப் இ(2340x1080p) பிக்சர் ரெசல்யூசன் மட்டுமே உள்ளது, ஆனால் ஐபோன்12 இல்(2532x1170p)பிக்சல் ரேசொலியேசன் இருப்பதால் கேலக்ஸி எஸ் 21 FE வை விட ஐபோன் 12 இன்னும் தெளிவான திரையைக் காட்சியளிக்கிறது
அதுமட்டுமின்றி HDR மற்றும் Dolby vision கொண்டிருப்பதால் இன்னும் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கின்றது
இருப்பினும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 FE பிரகாசிக்கும் தன்மை அதிகமாக இருப்பதால் வெளிப்புறங்களில் பயன்படுத்துவதற்கு ஐபோனை காட்டிலும் இன்னும் சிறப்பாகவே உள்ளது
S21 FE இல் 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் வருகிறது ஆனால் ஐபோனில் 12 இல் 60Hz மட்டுமே இருப்பதால் S21FEஇல் மிகவும் மென்மையாகச் செயல்படுகிறது இருப்பினும்,
திரையைப் பற்றிப் பேசுகையில் S21 FE இல் ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் இருப்பதால் திரையில் உங்கள் விரல் நுனியை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை திறக்க உதவுகிறது
ஐபோன் 12 இது போன்ற எந்த ஒரு பிங்கர் பிரிண்ட் சென்சார் இல்லை ஆனால் பேஸ் ஐ டி பயன்படுத்தி மொபைலின் திரையைத் திறக்கப் பயன்படுத்தப்படுகிறது
Performance
செயல்திறன் என்று வருகையில் ஐபோன் 12 ஒருசில வருடத்திற்கு முன்பு வெளியான A14 பயோனிக் சிப் கொண்டு உள்ளது
S21FE இல் சாம்சங் நிறுவனத்தின் பிராசசர் ஆன எக்ஸிநோஸ் 2100 என்ற ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது.
சாம்சங்கின் எக்ஸிநோஸ் 2100 காட்டிலும் ஐபோன் 12 உள்ள ஏ14 பயோனிக் ப்ராசசர் சற்று சக்தி வாய்ந்ததாகவே உள்ளது
s21 fe v/s iphone 12 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் உள்ள ப்ராசசரைஐ ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஐபோனின் A14 பயோனிக் சக்தி வாய்ந்ததாக உள்ளது
அதற்குக் காரணம் A14 பயோனிக் சிப் இல் பயன்படுத்தப்பட்டுள்ள CPU எக்ஸிநோஸ் 2100 CPU விட 10% சக்தி வாய்ந்ததாகும் மற்றும் குறைவான பேட்டரி திறனைப் பயன்படுத்துவதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது
கேமிங் செயல்திறனை பொருத்தவரை SAMSUNG s21 FE காட்டிலும் IPHONE 12 செயல்திறன் சற்று அதிகமாக உள்ளது
Cameras
s21 fe v/s iphone 12 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் முன்பக்கமாக ஒற்றை கேமராவை மட்டுமே பெற்றுள்ள நிலையில் ஆப்பிள் ஐபோன் 12 இல் 12mp f/2.2 கொண்டுள்ள நிலையில் கேலக்ஸி எஸ்21 FE ஸ்மார்ட்போனில் முன்பக்கமாக 32mp f/2.2 கொண்டது
ஐபோன் 12 ஸ்மார்ட்போனின் பின்பக்கமாக இரண்டு கேமராக்கள் உள்ளன ஒன்று முதன்மை கேமரா மற்றொன்று அல்ட்ரா வைட் கேமரா பயன்படுத்தப்படுகிறது, சாம்சங் கேலக்ஸி s 21fe ஸ்மார்ட்போன் பின்பக்கமாக 3 கேமராக்கள் கொண்டது இந்த ஸ்மார்ட்போனில் முதன்மை கேமரா மற்றும் அல்ட்ரா டெலிஃபோட்டோ லென்ஸ்கள் கொண்ட மூன்று ஸ்மார்ட் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது
s21 FE இல் கூடுதலாக 8mp டெலிஃபோட்டோ லென்ஸ் இருப்பதால் 30x ஸ்பேஸ் zoom மற்றும் 3x ஆப்டிகல் zoom ஆதரிக்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் ஒன்றுடன் ஒன்று கேமராக்களில் சளைத்தது அல்ல
இருப்பினும் சாம்சங் கேலக்ஸி s21 FE ஸ்மார்ட்போனில் கூடுதலாக டெலிஃபோட்டோ லென்ஸ்கள் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பம்சங்கள் ஆகும்
Battery
ஐபோன் 12 ஸ்மார்ட்போனில் 2,815 MAH பேட்டரி திறன் உள்ளது ஆனால் சாம்சங் கேலக்ஸி s21fe ஸ்மார்ட்போனில் 4500 Mah பேட்டரி திறன் உள்ளது,ஐபோனை காட்டிலும் பேட்டரி திறன் சற்று கூடுதலாகவே உள்ளது.
அதுமட்டுமின்றி சாம்சங் ஸ்மார்ட் போனில் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருப்பதனால் ஐபோன் 12 ஸ்மார்ட் போன் காட்டிலும் அதி வேகமாகச் சார்ஜ் செய்கிறது
S21 FE இல் வயர்லெஸ் சார்ஜிங் கூடுதல் சிறப்பம்சங்கள் ஆகும் அதுமட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மூலமாகத்
துணை கருவிகளான இயர் பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மூலமாகச் சார்ஜ் செய்துகொள்ள இயலும்
s21 fe v/s iphone 12 இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் நிறைகுறைகளை கண்டிருப்பீர்கள் இதில் எந்த ஸ்மார்ட்போனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ?
என்னிடம் கேட்டாள் நான் சாம்சங் கேலக்ஸி S2 FE ஸ்மார்ட் போன் தேர்வு செய்வேன் ஏனென்றால் ஐபோனை 12 ஐ காட்டிலும்
சாம்சங்S21 FE ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அதுமட்டுமின்றி
ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், எனப் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஆயினும் ஐபோன் 12 சளைத்தது அல்ல
ஐபோன் 12 இல் உள்ள A14 பயோனிக் சிப் சாம்சங் கேலக்ஸிS21 FE உள்ள எக்ஸிநோஸ் 2100 பிராஸஸரை காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்ததாகவே உள்ளது ஐபோன் 12 இல் வீடியோ எடுக்க மிகச் சிறந்த ஸ்மார்ட்போன் என்று கூறலாம்
ஏனென்றால் அதில் கொடுக்கப்பட்டுள்ள சினிமாட்டிக் மோட் மூலமாக வீடியோக்கள் பதிவிடும்பொழுது மிகச்சிறந்த வீடியோ காட்சிகளைப் பெற இயலும்