Samsung F23 5G V/S Iqoo Z6 5G,6.6இன்ஸ் ,full HD+,TFTடிஸ்ப்ளே, 120Hzபுதுப்பிப்பு தன்மை, கொரில்லா கிளாஸ் 5, 3.5mm ஆடியோஜாக், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 750G, 4GB+128GB, 6GB+128GB,50+8+2mp,முன்பக்க கேமரா 8mp,5000mah,
iqoo z6,6.58இன்ஸ், IPS. ஃபுல் ஹெச்டி பிளஸ்,120hz புதுப்பிப்பு தன்மை,3.5mm ஆடியோ ஜாக்,5000mah, குவால்காம் ஸ்னாப்ட்ராகன்695,50+2mp, 16mp முன்பக்க கேமரா, அனைத்து விதத்திலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகின்றன ஆனால் விலை மட்டும் சற்று ஏற்ற இறக்கங்கள் உள்ளன
IQOO Z6 என்ற ஸ்மார்ட் போனையும்,SAMSUNG F23 இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களில் எது சிறந்தது அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை மிகத் துல்லியமாகவும் அதன் நிறை குறைகள் என அனைத்தையும் இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்,
உங்களில் எத்தனை பேருக்கு சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிடிக்குமா? இல்லை எனக்கு சீன நிறுவனத் தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் பிடிக்காது என்பவர்களுக்கு மாற்றாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் பிடிக்குமா? என்ற கருத்துக்களை குறிப்பிடுக.
VIVO நிறுவனத்தின் துணைநிறுவனம்தான் IQOO என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் ?
samsung F23 5G
Display
6.6 இன்ஸ் கொண்ட ஃபுல் ஹெச்டி பிளஸ் உடன் 1080×2408 பிக்சல் ரேசொலியேசன் கொண்ட TFT பெற்று வாட்டர் டிராப் வடிவமைப்பை பெற்று வருகிறது இத்துடன்(400 PPI) பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த டிஸ்ப்ளேவில் 120Hz திரையின் புதுப்பிப்பு தன்மையை பெற்று உள்ளது,இந்த டிஸ்ப்ளேவில் 120Hz புதுப்பிப்பு தன்மை இருப்பதனால் இந்த ஸ்மார்ட்போனின் செயல் திறனுக்கு ஏற்றார்போல் திரையின் வேகத்தை தானாகவே செயல்படுத்திக் கொள்ள இயலும் இதன் மூலமாக நீங்கள் ஒரு கட்டுரையை வாசிக்கும் பொழுது 60Hz இல் செயல்படுகிறது அதே சமயத்தில் நீங்கள் கேம் விளையாடும் பொழுது தானாகவே 90Hz அல்லது120Hz என மாற்றி அமைத்துக் கொள்ளும்
designing
இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 165.7mm, அகலம் 7.7mm தடிமனை பொருத்தவரை 8.4mm கொண்டுள்ளது, இந்த டிஸ்ப்ளேவின் வடிவமைப்பு 20;9 தோற்ற விகிதம் பெற்று வருகிறது.
திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கமாக பிளாஸ்டிக் உடலமைப்பை மட்டுமே பெற்றுள்ளது.
Samsung f23 ஸ்மார்ட்போனின் வலது பக்கம் வால்யூம் பட்டம் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்றுள்ளது, இந்த பவர் பட்டன் இல் உள்ளே பதிக்கப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது இந்த பவர் பட்டன் ஆகவும் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகும் இரண்டு வகையில் பயன்படுத்திக் கொள்ள இயலும்.
கீழ்பகுதியில் 3.5mm ஆடியோ ஜாக்,usb type-C போர்டு, முதன்மை மைக்ரோபோன் போன்றவை இடம் பெற்றுள்ளது.மேல் பகுதியில் இரண்டாம் நிலை மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளது,
இடது பக்கம் சிம் கார்டு மற்றும் நினைவக அட்டை பயன்படுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
sim card
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் கார்டுகளும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 12 வகையான 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது,
சில ஸ்மார்ட் போன்நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவே 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கின்றது ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 12 வகையான 5G நெட்வொர்க்குகளை ஆதரிப்பதே சிறப்பாகும்,
இந்த F23 5G ஸ்மார்ட்போனில் (Carrier aggregation ) கொண்டிருப்பதால் உங்களுக்கு சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை கொடுக்கிறது. நினைவக அட்டையை பயன்படுத்தி 1TB வரையிலான நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்
oprating system
ஆன்டிராய்ட் ஓஎஸ் 12 உடன், one UI 4.1 கொண்டு செயல்படுகிறது இந்த ஸ்மார்ட்போன், தற்போது நடைமுறையில் உள்ள மற்ற ஸ்மார்ட் போன் UI காட்டிலும் சாம்சங் நிறுவனத்தின் ONE UI பயன்படுத்தும் பொழுது மற்ற ஸ்மார்ட் போனில் உள்ள UI காட்டிலும் சிறப்பாகவே உள்ளது,
சாம்சங் நிறுவனம் இந்த “F” வரிசையில் வருகின்ற ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு வருட ஆண்ட்ராய்ட் அப்டேட் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளது அத்துடன், செக்யூரிட்டி அப்டேட் நான்கு வருடங்களுக்கு வழங்கப்படும் என சாம்சங் தரப்பில் கூறப்படுகிறது
processor
சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் எப்பொழுதுமே தங்களது சொந்த ப்ராசசர் ஆன எக்ஸிநோஸ் ப்ராசசர் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது.
ஆனால் தற்போது களமிறங்கியுள்ள F23 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் பிராஸ்ஸேர் ஸ்னாப்டிராகன் 750G என்ற 5G பிராஸஸரை பயன்படுத்துகிறது இந்த ப்ராசசர் 8nm உருவாக்கப்பட்டது
CPU பொருத்தவரை 2.2Gh கிளாக் ஸ்பீடு கொண்டது,GPU பொறுத்தவரை Adrino 619 பயன்படுத்தப்பட்டுள்ளது,
storeg
LPDDR4X வகை சார்ந்த RAM பயன்படுத்தப்பட்டுள்ளது, உள்ள நினைவகத்திற்கு UFS 2.1 வகையை சார்ந்த நினைவகத்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நினைவகத்தை பொருத்தவரை 4GB RAM+128GB உள்ளடக்க நினைவகம் மற்றும்,6GB RAM+128GB உள்ள நினைவகம் என இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன.
இந்த ஸ்மார்ட்போனில் RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள கூடிய (Virtual Ram ) கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனின் RAM நினைவகத்தை அதிகரித்துக் கொள்ள இயலும்
rear camera
சாம்சங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பானJN 1 கேமராவை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவானது 50mp f/1.8 லென்சை கொண்ட முதன்மை கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது,
இரண்டாவதாக 8mp f/2.2 லென்ஸ் கொண்டு 123 டிகிரி வரையிலான விரிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யக்கூடிய அல்ட்ரா வைலட் கேமராவை பெற்றுள்ளது,
மூன்றாவதாக 2mp f/2.2 லென்ஸ் கொண்ட மேக்ரோ புகைப்படங்களை எடுக்க உதவுகிறது, இத்துடன் எல்ஈடி பிளாஷ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தி எடுக்கக்கூடிய Panorama, HDR, macro mode, Ultra wide photo, portrait photos, Night photography, போன்ற வகையான புகைப்படங்களை பதிவிடுவதுடன் மிக சிறப்பாகவே உள்ளது,
வீடியோ என்று வருகையில் இந்த ஸ்மார்ட்போனில் UHD 4K 30fps ரெசல்யூசன் உடன் கூடிய வீடியோக்களை பதிவிட இயலும் அத்துடன்,ஸ்லோமோஷனில் 480 fps மற்றும் 120fps வரையிலான ஸ்லோ மோசன் வீடியோக்களை பதி விடுகிறது
frond camera
முன்பக்கமாக 8mp f/2.2 லென்ஸ் கொண்ட கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த கேமராவை பயன்படுத்தி 4K வீடியோக்களை 30fps இல் பதிவிடலாம் மற்றும்1080p(FULL HD) வீடியோக்களை 30fps இல் பதிவு செய்கின்றன
battery
5000mah பேட்டரி திறனை பெற்று இந்த ஸ்மார்ட்போன்,25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெற்றுள்ளது, ஆனால் எந்த ஸ்மார்ட் போனுடன் சார்ஜர் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
அதற்கு பதிலாக TYPE-C TO TYPE-C டேட்டா கேபிள் மட்டுமே இந்த ஸ்மார்ட் போனுடன் வழங்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் தருணத்தில் உங்களிடம் பழைய SAMSUNG சார்ஜர் இருப்பின் பயன்படுத்திக் கொள்ளலாம் அதேசமயத்தில் இல்லை எனில் புதிய சார்ஜர் வாங்கும் நிலை ஏற்படும்
more future
Samsung F23 5G V/S Iqoo Z6 5G,இரண்டு வகையான WI-FI ஒரே நேரத்தில் ஆதரவு அளிக்கிறது, ப்ளூடூத் 5.1 ஆதரவை பெற்றுள்ளதால் டால்பி அட்மோஸ் ஆதரவை ப்ளூடூத் வழியாக மட்டுமே செயல்படுத்த இயலும்
இந்த டால்பி அட்மாஸ் ஆதரவை ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்பீக்கர் வழியாக செயல்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்,
இந்த ஸ்மார்ட்போனில் NFC இடம்பெற்றுள்ளது மற்றும் POWER COOLING டெக்னாலஜியை பயன்படுத்தி அதிகமாக வெப்பம் ஆகும்பொழுது இந்த டெக்னாலஜியின் மூலமாக வெப்பத்தை தணிக்கின்றன.
VOICE FOCUS என்ற சிறப்பம்சம் மூலமாக அழைப்புகளை மேற்கொள்ளும் போது துல்லியமான ஒளியினை வெளிப்படுத்துகின்றன
குறைகள் என்று காணும்போது
இந்த பட்ஜெட்டில் வெளிவரக்கூடிய மற்ற ஸ்மார்ட்போன்களில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பை பெற்றுள்ளது ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொடுக்கப்படாமல் இருப்பது,
இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் ஆதரவை பெற்றிருந்தாலும் இந்த டால்பி அட்மாஸ் ப்ளூடூத் இயர் போன்களில் மட்டுமே செயல்படுத்த முடிகிறது,
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன்களில் விலையை குறைப்பதற்காக தற்போது சார்ஜர் கொடுக்கப்படாமல் இருப்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகின்றது
AQUA BLUE,FOREST GREEN என்ற இரண்டு வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன
இதன் விலையை பொருத்தவரை ஆரம்ப விலையாக 4GB RAM+128GB rs 15,999 என்ற விலைகளிலும் கிடைக்கின்றன.
iqoo z6 5G
Display
6.58இன்ச் கொண்ட IPS full HD+ டிஸ்ப்ளேவை கொண்டு(1080×2408) பிக்சல் ரெசல்யூசன் உடன் 120Hz குதிரையின் வேகத்தை பெற்றுவருகிறது இந்த டிஸ்ப்ளேவில்(401ppi) திரையின் பிக்சல் அடர்த்திஉடன் வருகிறது,
120Hz கொண்டிருப்பதனால் திரையின் வேகத்தை தானாகவே 60Hz மற்றும் 90Hz to120Hz என்ற வகைகளில் தானாகவே மாற்றி அமைத்துக் கொள்ளும் திறனை பெற்றுள்ளது,
அதாவது கட்டுரைகள் படிக்கும் பொழுது 60Hz செயல்படுகிறது கேம் விளையாடும் போது தானாகவே 120Hzவரை தானாகவே அமைத்துக் கொள்கிறது.
இந்த டிஸ்ப்ளேவில் DCI-P3(wide gamut) என்ற சிறப்பம்சம் பெற்று இருப்பதனால் இதில் காணக்கூடிய வண்ணங்களை மிக அழகாக பிரதிபலிக்கிறது,
designing
இந்த ஸ்மார்ட்போனின் உயரம் 164mm, அகலம்75.84mm, தடிமன்8.25mm,187g எடையை பெற்று வருகிறது, இந்த ஸ்மார்ட்போனின் வலது பக்கம் பக்கவாட்டில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது,
கீழ்பகுதியில்usb type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக், முதன்மை மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளது,மேல் பகுதியில் இரண்டாம்நிலை மைக்ரோபோன் சிம் ஸ்லாட் இடம்பெற்றுள்ளது,
இந்தiqoo z6 ஸ்மார்ட்போனின் உடலமைப்பை பொருத்தவரை பிளாஸ்டிக் உடலமைப்பை பெற்றுள்ளது
sim card
இந்த சிம் ஸ்லாட் இல் இரண்டு சிம்கார்டுகள் அல்லது ஒரு சிம் கார்ட் ஒரு நினைவக அட்டை என்ற வகையில் மட்டுமே பயன்படுத்த இயலும்,
இரண்டு சிம்கார்டுகள் ஒரு நினைவக அட்டை என ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது
oprating system
ஆண்ட்ராய்டு 12 உடன் களமிறங்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் விவோ நிறுவனத்தின் UI ஆன FUNTACH OS12 உடன் செயல்படுகிறது .
battery
5000mahபேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 18W சார்ஜரை கொண்டு உள்ளது, இந்த சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும் பொழுது 5000mah பேட்டரியை 100% சார்ஜ் செய்வதற்கு 2.15 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றது,
cooling technolagy
ஐந்து அடுக்கு லிக்விட் கூலிங் டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளது இதன் மூலமாக அதிகப்படியான வெப்பநிலை ஏற்படும்பொழுது வெப்பத்தைத் தணித்துக் கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளது
processor
குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்ட்ராகன் 695 என்றப்பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த பிராசஸர் 5G ஆதரவை வழங்கக்கூடிய பிராசஸர் ஆகும்,
6nm இல்உருவாக்கப்பட்டதால் இந்த ஸ்மார்ட்போனில் குறைந்த பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தி அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய தன்மை உள்ளது,
இந்த பிராசஸர் செயல்பட ஆக்டாகோர்பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த பிரவுசர் 5G ஆதரவைப் பெற்று இருப்பதனால் இரண்டு சிம்கார்டுகலும் ஒரே நேரத்தில் 5G ஆதரவை வழங்குகிறது.
storeg
IQOO Z6 ஸ்மார்ட்போனில் இரண்டு வகையான RAM இல் கிடைக்கின்றன 4GB RM மற்றும் 8GB RAM என்ற இரண்டு வகைகளில் கிடைக்கப்பெறுகின்றன.RAM நினைவகத்தை அதிகரித்துக்கொள்ள EXTENDED RAM 2.0 வழங்கப்படுகிறது இதன் மூலமாக 4GB RAM எனில் 6GB என அதிகரித்துக் கொள்ள இயலும்
Rear camera
சாம்சங் நிறுவனத்தின் JN-1 என்ற 50mp கேமராவை முதன்மை கேமராவாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராவானது f1.8 லென்சை கொண்டது, இரண்டாவது கேமராவாக 2mp f/2.4 லென்ஸ் கொண்டது.
இந்த கேமரா சிறப்பம்சங்கள் 4GB RAM ஸ்மார்ட்போனுக்கு பொருந்தும் ஏனெனில் 6GB RAM கொண்ட ஸ்மார்ட்போன் இருக்கு மூன்று வகையான கேமராக்களை பயன்படுத்தப்பட்டுள்ளது,இதைப் பற்றிய உங்களது கருத்துக்கள் என்ன?
frond camera
முன்பக்கமாக 16mp f/2.0 லென்ஸ் கொண்ட செல்பி கேமராவை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கேமராக்களை பயன்படுத்தி எடுக்கக்கூடிய புகைப்படங்கள் பகலில் மிகச் சிறப்பாகவே உள்ளது
more future
இனைப்புகளை பொருத்தவரை Wi-Fi, I GPS, Bluetooth 5.1,3.5 mm audio jack, side mounted fingerprint sensor, compass, proximity sensor, ambient light sensor போன்ற சென்சார்களை கொண்டுள்ளது
Chromaic blue,dynamo blackஎன்ற இரண்டு வகையான வண்ணங்களில் கிடைக்கின்றன இதன் ஆரம்ப விலை 4GB+128GB Rs 15,499
Samsung F23 5G V/S Iqoo Z6 5G இதன் குறைகள் என்று காணும் பொழுது 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு வகையான கேமராக்களும் 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு மூன்று வகையான கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது இது எந்த வகையில் சரியானது என்று தெரியவில்லை,
மேலும் இதற்கு முன்பு வெளிவந்த iqoo z5 ஸ்மார்ட்போனில் மிக சக்தி வாய்ந்த பிராசஸர் கொடுக்கப்பட்டு இருந்தது ஆனால் இந்த z6 ஸ்மார்ட்போனில் ஒரு Mid-range பிராசஸர் கொடுத்திருப்பதுசற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது,
5G என்று வருகையில் இரண்டு வகையான 5G பேண்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, இதே கட்டுரையில் சாம்சங் F23 ஸ்மார்ட்போனில் 12 வகையான 5G பேண்ட் கொண்டுள்ளது ஆனால் இந்த Z6 ஸ்மார்ட்போனில் இரண்டு வகையான 5G பேண்ட் மட்டுமே இடம்பெற்றுள்ளது